உத்தரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116:
 
==வரலாறு==
பண்டைய [[வேதகாலம்|வேத காலத்தில்]] உத்தரப் பிரதேசப் பகுதிகளை [[குரு நாடு|குருக்கள்]],
[[பாஞ்சால நாடு|பாஞ்சாலர்கள்]] மற்றும் [[கோசல நாடு|கோசலர்கள்]] என மூன்று அரச குலங்கள் ஆண்டனர்.
 
வரலாற்றுக் காலத்தில் இம்மாநிலத்தின் வளமான [[அவத்]], [[தோவாப்]] மற்றும் [[ரோகில்கண்ட்]] பகுதிகளை [[தில்லி சுல்தானகம்]] மற்றும் [[மொகலாயர்]]களாலும்; பின்னர் [[பாரசீகம்|பாரசீக]] [[சியா இசுலாம்|சியா]] இசுலாமிய நவாப்புகள் மற்றும் ஆப்கானிய [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன் அரச குலம்]] 1719 முதல் 1858 முடிய தனியுரிமையுடனும்; பின்னர் [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்]] பின்னர் 1858 முதல் 1947 முடிய [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|ஆங்கிலேயர்களுக்கு]] கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் [[திறை|கப்பம்]] செலுத்தி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]] ஆட்சி செய்தனர். பின்னர் [[இந்திய விடுதலை நாள்|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் 1948-ஆம் ஆண்டில் அவத் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அவத் பகுதிகளில் [[சமசுகிருதம்]] - [[பாரசீக மொழி|பாரசீகம்]] கலந்த [[அவதி மொழி]] பேசப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உத்தரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது