ஆர். பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
பாலசுப்பிரமணியம் [[தமிழ்நாடு]], [[சுவாமிமலை]]யில் பிறந்தவர்.<ref name="pmj49">{{cite journal | title=நடிக திலகம் ஆர். பாலசுப்பிரமணியம் | author=மாரதன் | journal=பேசும் படம் | year=1949 | month=சனவரி | pages=பக். 98-108}}</ref> தஞ்சாவூர் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியப் பணியுடன் கும்பகோணத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த வாணி விலாச சபையின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.<ref name="pmj49"/> பட்டாபிராம சாத்திரியார் இராமாயணத்தை பகுதி பகுதியாக நாடகமாக்கி நடத்தி வந்த போது பாலசுப்பிரமணியம் சீதையாக நடித்து வந்தார். ஏ. ராஜகோபால் செட்டியார் இராமனாக நடித்து வந்தார். சில காலத்திலேயே பாலசுப்பிரமணியம் கம்சன், இராவணன் போன்ற வேறு வேடங்களிலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.<ref name="pmj49"/>
 
பாலசுப்பிரமணியத்தின் நாடகத்தைப் பார்த்த சிறீராமுலு நாயுடு [[துகாராம் (1938 திரைப்படம்)|துகாராம்]] (1938) திரைப்படத்தில் மும்பாஜியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தனர். [[முசிரி சுப்பிரமணிய ஐயர்]] இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலசுப்பிரமணியம் [[இராகமாலிகை]]யில் ஒரு பாடலும் பாடினார்.<ref name="pmj49"/> இதன் பின்னர் [[வேதவதி (சீதா ஜனனம்)|சீதா ஜனனம்]], [[ரம்பையின் காதல்]], [[வேதாள உலகம்]]<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/vedhala-ulagam-1948/article3023682.ece|title=Vedhala Ulagam 1948|work=[[தி இந்து]]|author=[[ராண்டார் கை]]|accessdate=12 செப்டம்பர் 2016}}</ref>, [[மனோன்மணி]] உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.<ref name="pmj49"/> இறுதியாக 1964 இல் வெளிவந்த [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] திரைப்படத்திலும், பின்னர் 1971 இல் வெளிவந்த [[ஆதி பராசக்தி (திரைப்படம்)|ஆதிபராசக்தி]] திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது