மார்க்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎மார்க்சிய நூல்கள்: *விரிவாக்கம்*
வரிசை 8:
 
மார்க்சிய முறைமை தொடக்கத்தில் [[மார்க்சியப் பொருள்முதல் வாதம்]] என்ற [[பொருளாதாரம்]] மற்றும் சமூக,அரசியல் ஆய்வைப் பயன்படுத்தி அமைப்புசார் பொருளியல் மாற்றத்தில் [[முதலாளித்துவம்|முதலாளித்துவத்தின்]] வளர்ச்சி மற்றும் வருக்கப் போராட்டத்தின் பங்கினை ஆய்வு செய்யவும் கருத்துரைக்கவும் பயன்பட்டது. மார்க்சிய நோக்கில் மிகக்கூடுதலான உற்பத்தித் திறன் கொண்ட இயந்திரமயத்திற்கும் சமூகமாக உற்பத்தியில் ஈடுபடும் பாட்டாளி வர்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் முதலாளித்துவத்தினுள் வருக்கப் போராட்டம் எழுகின்றது. தனியார் உடமையும் உபரிப் பொருளை (மிகையீட்டத்தினை) சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே எடுத்துக் கொள்வதும் இந்த வருக்கப்போராட்டத்தின் கூடுதல் காரணிகளாகும். இந்த சிறுபான்மையான முதலாளிகள் ''பூர்சுவா'' (bourgeoisie) எனப்படுகின்றனர். தொழிலாளர்களை அன்னியப்படுத்துவதால் இந்த முரண்கள் பாட்டாளி வருக்கத்திற்கு தெளிவாகும்போது இந்த இரு முரண்பட்ட வகுப்புக்களிடையே சமூகக் கிளர்ச்சி எழுகின்றது. இதுவே முனைப்புற்றுச் சமூகப் புரட்சியாக மாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக [[சமூகவுடைமை]] உருவாகின்றது; உற்பத்திக்கான வளங்கள் சமூக உடைமையாக்கலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற பகிர்தலும் நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையானவற்றை மட்டுமே உற்பத்தி செய்வதும் இந்த சமூகப் பொருளியல் அமைப்பிற்கான அடிப்படைகளாகும். உற்பத்தி விசைகளும் தொழினுட்பமும் முன்னேறி வந்தமையால் மார்க்சு சமூகவுடமை இறுதியில் [[பொதுவுடைமை]]க்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையான "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும் வருக்கங்கள் இல்லாத, நாட்டு வரம்பில்லாத, ஒப்புயர்விலாத மாந்தச் சமூகமாக முன்னேறும் என கருத்துரைத்தார்.
 
== உழைப்பாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும் ==
மார்க்சியத்தின்படி உலக மக்கள் அவர்கள் செய்யும் வேலைகளின் அடிப்படையில் பல பிரிவுகளாக [[சமூக வர்க்கம்|வர்க்கங்களாக]] பிரிக்கப்படுகின்றனர்.
 
=== முதலாளிகள் எதிர். பாட்டாளிகள் ===
பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மை பண்ணைகளில் ஊதியத்திற்காக வேலை புரிவதால் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" (அல்லது "பாட்டாளி வர்க்கம்") எனப்படுகின்றனர்.
 
பாட்டாளி வர்க்கத்தினரை விட சிறுபான்மையினரான மற்றொரு பிரிவினர் "[[முதலாளித்துவம்|முதலாளி வர்க்கம்]]" (அல்லது "பூர்சுவாக்கள்") எனப்படுகின்றனர். இவர்கள் தொழிற்சாலைகள், நிலம், மற்றும் தொழிலாளர்கள் பணி புரியும் கட்டிடங்களுக்கு உரிமையாளர்கள். தவிரவும் பணியாளர்கள் பயன்படுத்தும் அனைத்து [[கோல்|கருவிகளும்]] கூட இவர்களுக்கு உரிமையானது. பாட்டாளிகளின் வேலைத்திறனால் பிழைப்பதால் மார்க்சு இவர்களை "ஆளும் வர்க்கத்தினர்" என்கின்றார். தவிரவும் ஆளும் வர்க்கத்தினர் [[அரசாங்கம்]], [[படைத்துறை]], மற்றும் [[நீதிமன்றம்|நீதிமன்றங்களையும்]] கட்டுப்படுத்துகின்றனர்.
 
மார்க்சியப் பார்வைகளில், [[மூலதனம்]] "உற்பத்திக்கான வழிமுறை" ஆகும்; முதலாளிகள் பணத்தை பல வணிக முயற்சிகளில் [[முதலீடு]] செய்து, "இலாபம்" அடைந்து தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
 
பெரும்பாலான தொழிலாளர்கள் முதலாளிகளின் அல்லது "பெடிட்-பூர்சுவா"க்களின் (சிறு வணிக உரிமையாளர்கள்) நிறுவனங்களில் பணி புரிகின்றனர். முதலாளிகள் தொழிலாளர்களின் வேலை நேரத்திற்கு மாற்றாக [[கூலி]] தருகின்றனர். முதலாளி தொழிலாளியின் நேரத்தை வாங்கியுள்ளதால் அந்த நேரத்தை முதலாளிக்கு வேலை செய்வதில் செலவிட வேண்டியுள்ளது. மார்க்சிய கருத்துக்களின்படி, [[விளைபொருள்]] ஒன்றிலிருந்து கூடுதல் பணம் பெற முதலாளிக்கு இதுவே ஒரே வழி. முதலாளகள் தொழிலாளியின் நேரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவாக சுரண்டுகின்றனர். முதலாளிக்குபணியாளர் தயாரித்த பொருளுக்கு குறிப்பிட்ட விலை கிடைக்கின்றது. இந்த விலையை விட பணியாளரின் வேலைநேரத்திற்கு குறைவாக விலை கொடுப்பதால் முதலாளிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்கின்றனர். இவ்விதமாக தொழிலாளியின் வேலைத்திறனை சுரண்டுகின்றனர்:
* அவர்கள் செய்த வேலைக்கு சரியான கூலி கொடுக்காது
* தொழிலாளருக்குக் கொடுக்காத கூடுதல் பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளுதல்
* தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான கூலி கொடுப்பதால் எவ்வளவு வேலை செய்தாலும் அவர்கள் [[வறுமை|வறியவர்களாகவே]] இருப்பது
 
== மார்க்சிய நூல்கள் ==
{{multiple image
| align = left
| direction = horizontal
 
| image1 = Marx6.jpg
| width1 = 135
 
| image2 = Engels.jpg
| width2 = 140
 
| image3 = Lenin perfil.jpg
| width3 = 203
 
| footer = [[கார்ல் மார்க்ஸ்]] (ஒன்று) [[பிரெட்ரிக் எங்கெல்சு]] (இரண்டு) மற்றும் [[விளாதிமிர் லெனின்]] (மூன்று)
}}
 
{{colbegin|2}}
* தாபனத்தைப் பற்றி.. ஸ்டாலின், [[கியார்கி திமித்ரோவ்]], காகனேவிச், [[மா சே துங்]]
வரி 87 ⟶ 118:
# வெகு ஜனங்களிடையே கட்சியின் பணி - [[விளாதிமிர் லெனின்|லெனின்]]
{{colend}} <ref>{{cite web|url=http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/tamil/Karl%20Marx.html |title=மார்க்சிய நூல்கள் | publisher=www.thamizhagam.net (தமிழ்) |date=2013-16 |accessdate=2016-08-25}}</ref>
{{multiple image
| align = left
| direction = horizontal
 
| image1 = Marx6.jpg
| width1 = 135
 
| image2 = Engels.jpg
| width2 = 140
 
| image3 = Lenin perfil.jpg
| width3 = 203
 
| footer = [[கார்ல் மார்க்ஸ்]] (ஒன்று) [[பிரெட்ரிக் எங்கெல்சு]] (இரண்டு) மற்றும் [[விளாதிமிர் லெனின்]] (மூன்று)
}}
 
==சான்றாதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மார்க்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது