மார்க்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
மார்க்சியத்தின்படி தொழிற்சாலைகள், கருவிகள், மற்றும் பணியிடங்கள் தாங்களாகவே எவ்வித மதிப்பையும் தரவியலாது. அவைகள் ஒரு [[அவுரிநெல்லி]] புதர் போன்றது: புதருக்கு தனியே மதிப்பில்லை. மக்கள் தங்கள் பணிநேரத்தை செலவிடுவதாலேயே மதிப்பு விளைகின்றது. காட்டாக, எவரேனும் ஒருநாளை செலவழித்து அவுருநெல்லிகளைப் பறிக்கின்றனர். பறிக்கப்பட்ட அவுரிநெல்லிகளைத் தான் விற்கவும் உண்ணவும் முடியும்.
=== வர்க்கப் போராட்டம் ===
மார்க்சியக் கருதுகோளின்படி முதலாளிகளும் தொழிலாளிகளும் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவர்கள் "[[நியாயவாதம்|நியாயவாத]] பொருண்மியம்" என்கின்றனர். இதனிலிருந்தே [[மனிதர்|மனித]] [[வரலாறு]] பல்வேறு சமூக வர்க்கங்களுக்கிடையேயான பிணக்குகளின் வரலாறு என்ற கருத்து எழுந்துள்ளது. வெவ்வேறு முடிவுடைய வெவ்வேறு வர்க்கங்களுக்கு இடையே விவாதங்களும் சண்டைகளும் மூளுகின்றன. சமூக மாற்றமே இதன் தீர்வு.
 
முதலாளித்துவம் தொழிலாளிகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டும் எனவும் அவர்களது கூலியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கும் எனவும் மார்க்சியம் கூறுகின்றது. தங்களுக்கு கிடைக்கும் இலாபம் கூட வேண்டும் என்பதற்காகவும் இலாபத்தை விரைவாக அடைய வேண்டும் என்பதற்காகவும் முதலாளிகள் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் கூலிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டியுள்ளது; "சுரண்டல் வீதத்தை" குறைத்து தங்கள் வாழ்க்கை அமைதியாகச் செல்லப் போராடுகின்றனர். இதனையே மார்க்சியம் "வர்க்கப் போராட்டம்" என்கின்றது: தொழிலாளர்களும் அவர்களது மேலாளர்களும் தங்கள் தன்னலம் காக்க தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
 
மார்க்சியவாதிகள் அனைத்து எழுதப்பட்ட வரலாறும் பொருளியல் வர்க்கத்தினரால் பிரிக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். காட்டாக [[நில மானிய முறைமை]] ([[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்கால]] [[சமூகம்]] [[நில மானிய முறைமை|நிலக்கிழார்]]களாலும் உயர்குடியாளர்களாலும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆளும் வர்க்கத்தினரின் செல்வமும் அதிகாரமும் விவசாயிகளின் தொழிலால் விளைந்தவை. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் மேலும் மேலும் உயர்ந்ததால் சிறு வணிகர்களும் அங்காடிகளும் தோன்றலாயின. இவர்கள் தங்களுக்குள் சங்கங்கள் அமைத்துக் கொண்டு பணியாளர்களை அமர்த்திக் கொள்ளத் தொடங்கினர். இந்த தொழிலாளர்கள் இப்பணிகளால் செழிக்கத் தொடங்கினர். இவையே முதலாளித்துவம் உருவானதற்கான வரலாறாகும்.
 
இதேமுறையில், வர்க்கப் போராட்டத்திலிருந்து [[பொதுவுடைமை]] (அல்லது [[சமூகவுடைமை]]) உருவாகும் என மார்க்சியவாதிகள் கருதுகின்றனர். இருப்பினும் தொழிலாளர் போராட்டம் வலுப்பெற்று புரட்சி வெடித்தால் முதலாளித்துவத்திற்கு மாற்றாக பொதுவுடமை தோன்றும் எனக் கருதிகின்றனர்.
 
== மார்க்சிய நூல்கள்<ref>{{cite web|url=http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/tamil/Karl%20Marx.html |title=மார்க்சிய நூல்கள் | publisher=www.thamizhagam.net (தமிழ்) |date=2013-16 |accessdate=2016-08-25}}</ref> ==
"https://ta.wikipedia.org/wiki/மார்க்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது