நீதித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding Template:Law using AWB
வரிசை 25:
*[[பொதுச்சட்டம்]] நிலவும் நாடுகளில் நீதிமன்றங்கள், அரசமைப்புச் சட்டங்கள், அரசாணைகள், முறைப்படுத்தல்கள் போன்ற சட்டங்களைக் குறித்த சரியான புரிதலை வழங்குகின்றன. மேலும் முந்தைய [[முன்காட்டு|வழக்குச் சட்டம்]] அடிப்படையில், சட்டமன்றங்கள் சட்டமியற்றாத வழக்குகளில், மட்டுபட்ட அளவில் சட்டங்களை ஆக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பெரும்பான்மையான பொதுச்சட்ட நாடுகளில் [[அலட்சியம்|அலட்சியத்தினால்]] எழும் [[உரிமைத்தீங்கு]]க்கு எந்த சட்டமன்ற சட்டத்திலிருந்தும் தீர்வு பெறப்படாது உள்ளது.
*[[குடிசார் சட்டம் (சட்ட முறைமை)|குடிசார் சட்ட]] நாடுகளில், நீதிமன்றங்கள் சட்டத்திற்கான புரிதலை வழங்குகின்றன;ஆனால் அவை சட்டத்தை ''ஆக்குவதிலிருந்து'' விலக்கப்பட்டுள்ளனர். எனவே குறிப்பிட்ட வழக்குக்கிற்கான தீர்ப்பை மட்டுமே வழங்குகிறார்களே தவிர பொதுவான தீர்வுகளை முன்வைப்பதில்லை. [[சட்டநெறி]] வழக்குச் சட்டத்திற்கு இணையான பங்கு வகிக்கிறது.
* [[ஐக்கிய அமெரிக்கா]]வின் நீதிமன்ற அமைப்பில் [[ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றம்]] கூட்டாட்சி அரசமைப்பின் புரிதலை வழங்கும் அதிகாரம் கொண்டுள்ளது. இந்த அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து சட்டமன்ற சட்டங்களும் முறைப்படுத்தல் ஆணைகளும் பல்வேறு மாநிலங்களின் சட்டங்களும் இந்த நீதிமன்றத்தால் புரிதல் வழங்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாட்சி நீதிமன்ற முறைமையில் கூட்டாட்சி வழக்குகள் ''ஐக்கிய அமெரிக்க மாவட்ட நீதிமன்றங்கள்'' எனப்படும் விசாரணை நீதிமன்றங்களிலும் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றங்களிலும் இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் நடத்தப்பெறுகின்றன. [[மாநில நீதிமன்றம் (ஐக்கிய அமெரிக்கா)|மாநில நீதிமன்றங்கள்]] 98% வழக்காடல்களை மேற்கொள்கின்றன;<ref name=ABACourtStructure>American Bar Association (2004). [http://public.findlaw.com/abaflg/flg-2-2a-4.html How the Legal System Works: The Structure of the Court System, State and Federal Courts]. In ''ABA Family Legal Guide''.</ref> இவை வெவ்வேறு பெயர்களுடன் தனிப்பட்ட அமைப்புக்களையும் கொண்டுள்ளன. இவற்றின் கீழுள்ள விசாரணை நீதிமன்றங்கள் "பொது முறையீடு நீதிமன்றம்", என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் "உயர்நிலை நீதிமன்றங்கள்" அல்லது "பொதுநலவாய நீதிமன்றங்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.<ref>[http://www.quickmba.com/law/sys/ The American Legal System].</ref> நீதித்துறை முறைமையில், மாநிலமாக இருந்தாலுதம் கூட்டாட்சியாக இருந்தாலும், முதலில் முதல்நிலை நீதிமன்றத்தில் துவங்கி மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று இறுதியில் கடைநிலை நீதிமன்றத்திற்கு வருகின்றன.<ref>Public Services Department. {{cite web |url=http://www.law.syr.edu/Pdfs/0Intro%20Court%20System.pdf |title=Introduction to the Courth system |publisher=[[Syracuse University College of Law]]}}</ref>
* [[பிரான்சு|பிரான்சில்]], சட்டம் குறித்த புரிதலை வழங்க இறுதிநிலை அதிகாரம் நிர்வாக வழக்குகளில் மாநிலங்களவையிடமும் குடிசார் மற்றும் குற்றவியல் வழக்குகளில் உச்சநீதிமன்றத்திடமும் (Court of Cassation) உள்ளது.
* [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசில்]], சட்டத்திற்கான இறுதிநிலைப் புரிதலை வழங்கும் அதிகாரம் [[தேசிய மக்கள் பேராயம்|தேசிய மக்கள் பேராயத்திடம்]] உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நீதித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது