"நீலகிரி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎top)
 
==பழங்குடியினர்==
நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப்படுகிறது. பாரம்பரியமாக இருந்து வரும் பழங்குடியினர் [[இருளர்]], [[குறும்பர்குரும்பர்]], [[பனியர்]], [[தொதவர்]] எனப்படும் [[தோடர்]], [[கோத்தர்]], [[நாயக்கர்]] போன்ற பழங்குடியினர் உள்ளனர். இவர்களில் பழமையான இனத்தவர் தோடர். இப்பழங்குடிகளில் இருளரே கடுமையான உழைப்பாளிகள். வேளாண்மையிலும் ஈடுபடுகின்றனர். தொதவர் வாழும் இடம் மந்து எனப்படும். அதுபோல கோத்தர் வாழிடம் கோக்கால் என அழைக்கப்படுகிறது.
[[குறும்பர்]] பேசும் மொழியில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. குறும்பரில் பல வகையுண்டு. அதில் பெட்ட குறும்பர் 28 சந்ததிகளாகப் பிரிந்துள்ளனர். இவர்களைத் தவிர கசவர் என்ற பழங்குடிகள் நீலகிரி மாவட்டத்தில் சில ஊர்களில் வசிக்கின்றனர். பழங்குடி மக்களிடத்தில் அடிப்படை தேவையை நிறைவு செய்துகொள்ளும் மனப்பான்மையே காணப்படுகிறது. மற்ற மாநில பழங்குடிகளோடு ஒப்பிடும்போது நீலகிரிப் பழங்குடியினர் நல்ல நாகரீகம் பெற்றவர் என்றே சொல்லலாம்.
2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள்தொகை 7,62,141. இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சி - 394, குன்னூர் நகராட்சி - 122, உதகை வட்டம் - 4,329, குன்னூர் வட்டம் 2,397, கோத்தகிரி வட்டம் 6,197, கூடலூர் வட்டம் 15,450 என 28,889 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கல்வி அறிவு (சதவீதத்தில்) தோடர் - 29.52, கோத்தர் - 32.71, குரும்பர் - 18.13, முள்ளுக்குரும்பர் - 38.15, இருளர் - 21.78, பனியர் - 11.27, காட்டு நாயக்கர் - 9.03.இந்த ஆறு பழங்குடியின மக்களில், தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம், சுதந்திரத்திற்குப் பின்னும் முன்னேற்றம் அடையவில்லை. கூடலூரில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளா வாழ்ந்து வருகின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/article5379313.ece | title=நீலகிரி : சுதந்திரத்துக்கு முன் மன்றாடி.. சுதந்திரத்துக்குப் பின் நாடோடி.. | date=22 நவம்பர் 2013 | accessdate=25 நவம்பர் 2013 | author=ஆர். டி. சிவசங்கர்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2120523" இருந்து மீள்விக்கப்பட்டது