"மனித மூளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
.
(.)
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Skull and brain normal human ta.svg|thumb|மனித மூளை, மண்டையோட்டின் வரைபடம்.]]
'''[[மனித]] மூளை''' மனித [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] தலைமையானதும், [[மனிதன்|மனித]] உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், [[இச்சையின்றிய செயற்பாடு|இச்சை இன்றிய செயற்பாடுகளான]] [[மூச்சுவிடுதல்]], [[சமிபாடு]] (செரிமானம்), [[இதயத்துடிப்பு]], [[கொட்டாவி]]<ref>V.S. Ramachandran, {{cite web | url =http://www.edge.org/3rd_culture/ramachandran/ramachandran_p1.html | title = Mirror Neurons and imitation learning as the driving force behind "the great leap forward" in human evolution | accessdate = 2006-11-16 }}</ref> போன்ற செயற்பாடுகளையும்,<ref name='nih'>{{cite web|url=http://science.education.nih.gov/supplements/nih4/self/guide/info-brain.htm |title=Information about the Brain (மூளையைப் பற்றிய தகவல்கள்) |accessdate=2009-07-02 |publisher=National Institutes of Health }}</ref> விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
 
மனிதனின் [[மூளை]], மற்ற [[பாலூட்டி]]களின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த [[பெருமூளைப் புறணி]]ப் (''cerebral cortex'') பகுதியாகும். [[நரம்பிழையம்|நரம்பிழையத்தால்]] (''neural tissue'') உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் [[முன்மூளை]]யில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற [[விலங்கு]]களில் இருந்து [[மனிதர்|மனிதனைப்]] பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், [[பகுத்தறிவு|பகுத்தறிதல்]], [[கல்வி|கற்றறிதல்]] ஆகியவற்றிக்குக் காரணமான [[மூளையின் முன் மடல்]]கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், [[கண்]] பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2121128" இருந்து மீள்விக்கப்பட்டது