குருதிக்குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கட்டமைப்பு: தமிழில் படிமம்
சிNo edit summary
வரிசை 45:
குருதி மயிர்க்கலன்கள் மிகவும் எளிமையானவையாகும். இவற்றில் செதின் மேலணிக்கலங்களைத் தவிர வேறெந்தக் கட்டமைப்பும் காணப்படுவதில்லை. இவற்றினூடாகவே குருதிக்கும் இழையங்களுக்கும் இடையே பதார்த்தங்கள் (வாயுக்கள், ஊட்டச்சத்துக்கள் இருதிசையிலும்) பரிமாற்றப்படுகின்றன.
[[படிமம்:Blutkreislauf.png|thumb|upright|200px|right|மனிதக்குருதி சுற்றோட்டத் தொகுதி. [[சிவப்பு]] [[உயிர்வளி|உயிர்வளியேற்றப்பட்ட]] குருதியையும், [[நீலம்]] உயிர்வளியகற்றப்பட்ட குருதியையும் குறிக்கிறது.]]
 
==தொழிற்பாடு==
 
குருதியோட்டத்தில் குருதிக் கலன்கள் விசை வழங்குவதில்லை. நாடிக்குருதியோட்டத்துக்கான வலு இதயத்தாலும், நாளக் குருதியோட்டத்துக்கான வலு அருகிலுள்ள நாடித்துடிப்பு, வன்கூட்டுத் தசைச் சுருக்கத்தாலும் வழங்கப்படும். எனினும் குருதிக் கலன்களிலுள்ள மழமழப்பான தசைகளால் அவற்றின் விட்டத்தை மாற்றியமைக்க முடியும். மழமழப்பான தசைகள் சுருங்கும் போது விட்டம் குறைந்து குருதியோட்டம் குறையும். மழமழப்பான தசைகள் தளரும் போது விட்டம் அதிகரித்து குருதி விநியோகம் அதிகரிக்கும். இச்செயற்பாடுகள் அனைத்தும் இச்சையின்றிய வகையில் தன்னாட்சி நரம்புத் தொகுதியால் கட்டுப்படுத்தப்படுகின்றது. உடல் வெப்பநிலைச் சீராக்கம், அழற்சி தரு தூண்டற்பேறு, குருதி அமுக்கச் சீராக்கம் போன்ற ஓர்சீர்த்திட நிலை சார்ந்த செயற்பாடுகளில் குருதிக் கலன் விட்டம் மாற்றப்படும்.
 
==நோய்கள்==
* வரிக்கோஸ் நாளம்: நாளங்களின் வால்வுகள் தொழிற்பாடற்றுப் போவதால் அவற்றுள் குருதி தேக்கமடைந்து உருவாகும் நோய் நிலமை.
* முடியுரு துரொம்போஸிஸ்: இதயத்தசைகளுக்கு குருதி விநியோகம் வழங்கும் முடியுரு நாடிகள் ஆரம்பத்தில் LDL (Low Density Lipoprotein) படிவதாலும், பின்னர் குருதி உறைவதாலும் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படல்.
 
==பிற இணைப்புகள்==
* http://www.youtube.com/watch?v=XFtiopcDTgM
"https://ta.wikipedia.org/wiki/குருதிக்குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது