பொம்மிரெட்டி நாகிரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Nagi reddy.jpeg|thumb]]
'''பி. நாகிரெட்டி''' என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி ([[ஆங்கிலம்]]:Bommireddy Nagi Reddy) ([[டிசம்பர் 2]] [[1912]] - [[பெப்ரவரி 25]] [[2004]]) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார்<ref>http://www.hindu.com/2004/02/27/stories/2004022709540300.htm</ref>. வெங்காய ஏற்றுமதியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாகிரெட்டி, தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்டமான விஜயா- வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, எங்கவீட்டுப்பிள்ளை உள்பட 50 வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.
 
 
== வரலாறு ==
 
நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912-ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது. இவருடைய தந்தை, வெளிநாடுகளுக்கு வெங்காயம் முதலான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார். இந்த தொழிலில் நாகிரெட்டி தமது 18-வது வயதில் ஈடுபட்டார். ஒரு முறை, வெங்காயம் ஏற்றிச்சென்ற கப்பல் கடலில் மூழ்கியதால் நட்டம் ஏற்பட்டது. எனவே 'பி.என்.கே' என்ற அச்சகத்தை தொடங்கினார். 'ஆந்திரஜோதி' என்ற தெலுங்கு மாத இதழைத் தொடங்கினார். நாகிரெட்டியின் மனைவி பெயர் சேசம்மா. வேணுகோபாலரெட்டி, விசுவநாத் ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி என்ற 3 மகன்களும் ஜெயம்மா, சாரதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
 
 
== இதழியலாளர் ==
 
குழந்தைகளுக்காக தெலுங்கில் 'சந்தமாமா' என்ற சிறுவர் இதழைத் தொடங்கினார். இது பின்னர் 'அம்புலிமாமா' என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது. அது வெற்றியடையவே, பல்வேறு மொழிகளிலும் வெளியாயிற்று. ஆந்திராவைச் சேர்ந்த சக்ரபாணி என்ற எழுத்தாளர். அம்புலிமாமா இதழில் கதை எழுதி வந்தார். அப்போது நாகிரெட்டியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். சினிமாத்துறையில் ஈடுபட விரும்பி, வடபழனி அருகே நிலம் வாங்கி, வாகினி ஸ்டூடியோவைத் தொடங்கினார்கள்.
 
வரி 31 ⟶ 27:
* [[கலைமாமணி விருது]] 1972 - 1973
* [[தாதாசாகெப் பால்கே விருது]] 1981
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== இவற்றையும் காண்க ==
[[அம்புலிமாமா]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.maalaimalar.com/2012/02/14184411/onion-merchant-change-nagiredd.html பட அதிபர் நாகிரெட்டி]
* [http://www.oldtelugumusic.com/2010/03/nagireddy-chakrapani.html நாகிரெட்டி வரலாறு ஆங்கிலம்]
* [http://www.kodambakkamtoday.com/index.php/nagi-reddy-centenary-celebrations நாகிரெட்டி நூற்றாண்டு விழா]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:பத்திரிகையாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொம்மிரெட்டி_நாகிரெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது