கோபாலகிருஷ்ண பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
தஞ்சாவூரில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்த இவர் [[தியாகராஜர்|தியாகராஜ சுவாமி]]யின் சம காலத்தவர் ஆவார். பாரதியின் தந்தை ராமசுவாமி பாரதி ஒரு பாடகராய் இருந்தார். கோபாலகிருஷ்ணர் [[அத்வைதம்]], யோக சாத்திரம் போன்றவற்றை மாயவரத்தில் ஒரு குருவிடம் இருந்து கற்றார். உலக வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபடாவிட்டாலும் தன்னளவில் இவர் ஒரு துறவியைப் போலவே வாழ்ந்தார். குடும்பப் பின்னணியும் [[கருநாடக இசை|இசை]]யைச் சார்ந்தே இருந்து வந்ததால் சிறு வயதில் இருந்தே சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டார். தானே பாடல்களை இயற்றிப் பண்ணமைத்துப் பாடும் திறன் இயல்பாகவே இவருக்கு வந்தது. அவர் காலத்தில் இருந்த மற்ற இசைப் பாடகர்களின் கச்சேரிகளையும் அடிக்கடி கேட்டுத் தன் இசை அறிவை மேலும் மெருகேற்றினார்மெருகேற்றிக்கொண்டார்.<ref name="heritage">[http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2008-12-01-20-31-36/2009-09-19-08-16-58/2009-09-19-08-18-48 கோபாலகிருஷ்ண பாரதியார் காலம் 1811-1896], கீதா சாம்பசிவம்</ref>.
 
அத்வைத சித்தாந்த்தைசித்தாந்தத்தை ஒட்டியே இவர் பாடிய பல [[கிருதி]]கள் ஏனையோரால் பாடப்பட்டு இவர் காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்து வந்தது. பல பாடகர்கள் இவரிடம் வந்து தங்கள் தேவைக்கேற்றபடி கீர்த்தனைகளை இயற்றித் தரும்படிக் கேட்டுக் கொண்டு பாடுவதுண்டு. இவர் தன் பாடல்களில் கடைசியில் தன் பெயரான கோபாலகிருஷ்ணா வரும்படியாக இயற்றி வந்தார்<ref name="heritage"/>. இவர் இயற்றிய [[நந்தனார் சரித்திரம்]] ஒரு சங்கீத கதா காலட்சேபமாக இவர் காலத்திலும், அதற்கு அப்பால் இன்று வரையிலும் நிலை பெற்று இருக்கிறது.
 
நந்தனார் சரித்திரத்தைத் தன் காலத்திலேயே வெளியிட்டார் கோபாலகிருஷ்ண பாரதியார். ஆனால் அப்போது திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இதில் உள்ள இலக்கணப் பிழைகளை மட்டுமல்லாது பொருள் குற்றம், கருத்தில் பிழை எனச் சொல்லி இந்த நந்தனார் சரித்திரத்திற்குப் பாயிரம் எழுதிக் கொடுக்க மறுத்து வந்தார். பின்னால் கோபாலகிருஷ்ண பாரதியார் நடையாக நடந்து, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மனதைத் தன் இசையால் மாற்றி, பாயிரம் எழுதி வாங்கினார் என [[உ. வே. சாமிநாதையர்]] தன்னுடைய என் சரித்திரத்தில் குறிப்பிடுகிறார். பரத நாட்டியத்தில் புகழ் பெற்ற [[பாலசரஸ்வதி]] இவரின் குறிப்பிட்ட சில பாடல்களைத் தன் அபிநயத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார்<ref name="heritage"/>.
"https://ta.wikipedia.org/wiki/கோபாலகிருஷ்ண_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது