இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ராமர் ஹிந்து மத கடவுள், தவறான எண்ணம் வரும் படி இருந்த விக்கிபீடியா மாற்றப்பட்டது.
வரிசை 13:
'''இராமர்''' இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் [[திருமால்|திருமாலின்]] ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல [[அயோத்தி|அயோத்தியின்]] அரசர் [[தசரதன்|தசரதனின்]] நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் [[இலக்குவன்]], [[பரதன்]], [[சத்ருகனன்]] ஆவர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் [[திரேதா யுகம்|திரேதா யுகத்தில்]] பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
 
கி.மு 4 ஆம் நூற்றாண்டுகள் அளவில் [[வால்மீகி]] எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயண இதிகாசத்தின் முக்கியக் கதை மாந்தர் ஆவார். இராமரைக் கடவுளாக [[இந்து சமயம்|இந்து]] சமயத்தவர்களில் ஒருசாரர் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக [[விஷ்ணு]]வின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் (Supreme Being) கருதும் பிரிவுகளும் உண்டு. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றி பல ஆராய்ச்சிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு.
 
{{Hinduism small}}
வரிசை 40:
 
=== பட்டாபிஷேக ஏற்பாடுகளும் காடேகுதலும் ===
திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. [[கைகேயி|கைகேயியின்]] சிறப்பு பணிப்பெண் [[மந்தரை|கூனி]] ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறியாதஅறிந்த தசரதன் உயிர் துறந்தான்.
 
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய இறுதிக் கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான். காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அதுவரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.
வரிசை 115:
== தாய்லாந்து மன்னர்களில் பெயர்களில் இராமர் ==
அவதாரக்கடவுள் இராமரின் பெயரிலேயே தாய்லாந்தின் மன்னர்கள் (Rama (Kings of Thailand))பெயர்கள் அமைகின்றன.
 
== தமிழகத்தில் திராவிட அரசியலும் இராமர் எதிர்ப்புக் கொள்கையும் ==
தமிழகத்தில் [[திராவிட இயக்கம்]] வளர்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் இராமன் திராவிட இனத்தை அழித்து ஆரிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய மன்னனாகவே [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தாரால்]] சித்தரிக்கப்பட்டார். மேலும் ராமனை மது அருந்தியவன் என்றும், கோழை என்றும், மாமிசம் தின்பவன் என்றும் ஒருதரப்பான தகவல்களுடன் பரப்பி வந்தனர்.
 
பெரியார் இராமாயணத்தைக் குறித்துச் சொன்ன கருத்துக்கள் வடமொழியின் வால்மீகி இராமாயணத்தைச் சார்ந்து இருந்தனவே அன்றி, தமிழில் கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொள்ளவில்லை.<ref>http://siragu.com/?p=9481</ref>
 
=== ராமன் மது அருந்தியவன் என்பதற்கு எடுத்துரைத்த கதை நிகழ்வுகள் ===
ராமன் மது அருந்தியவன் என்பதற்கு வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
* வால்மீகி சருக்கம் 4 ஸ்லோகங்கள் 7,33
* வால்மீகி அயோத்தியா கண்டம் 2,21,57,99
* வால்மீகி கிஷ்கிந்தா கண்டம் 18,22,42
 
=== சீதை மது அருந்தியதாக எடுத்துரைத்த கதை நிகழ்வுகள் ===
நாடு மீண்ட பின்னர் அசோகவதிகா என்ற அந்தப்புர உத்யானவனத்தில், ராமன் சுராகிரியா என்ற மதுவை கொடுக்கிறான். வாசனை மணக்கும் ருசியான மதுவை சீதையும் வாங்கிக் குடித்தாள்<ref>7 வது கண்டம் சிலோகம் 18,22,42</ref> அயோத்தி ராசபாட்டைகளில் எப்போதும் சுவைமிக்க கள்ளின் வாசனை வீசிக்கொண்டிருக்குமாம்?<ref>சருக்கம் 4-33-7</ref>
 
=== ராமர் வீரம் குறித்த திராவிட இயக்க விமர்சனம் ===
''ராமா! நீ வேசத்தில் ஆணே ஒழிய உன்னிடம் ஆண்மை இல்லை, வீரமில்லை, தேஜசுமில்லை..'' என்று சீதை இராமனைப் பார்த்து கூறுவதாக வால்மீகி ராமாயணம் கூறுகின்றது. எனவே இராமர் வீரமற்றவர் என்பது திராவிட இயக்கத்தவரின் கருத்தாக வைக்கப்பட்டது.
 
==== முழுமையான வால்மீகி இராமாயணத்தில் ====
தந்தையின் கட்டளைப்படி வனம் செல்ல முடிவெடுத்த இராமர் [[சீதை]]யை வனத்திற்கு அழைத்துச்சென்று சிரமப்படுத்த விரும்பாமல் விட்டுச்செல்ல முடிவெடுத்தார். அப்போது சீதை தன்னையும் உடன் அழைத்துச் செல்லும்படி இராமரை முடிவெடுக்க வைக்கக் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
 
இவ்வாறு கூறியதனை தன்னுடைய குற்றமாக சீதை கூறும் பகுதி வால்மீகி இராமாயணத்தில், சுந்தர காண்டப்பகுதியில் வருகிறது. இராமரின் வீரத்தைப்புகழ்ந்து பல செய்திகளைக் கூறியபின்னர், முன்பு தாம் ஏதேனும் குற்றம் செய்திருக்கக்கூடுமோ என்று வருந்தும்போது, வனத்திற்கு அழைத்துப்போக மாட்டேன் என்று தம்மிடம் ராமர் கூறியது கேட்டு தாம் அப்போது கூறிய கடும்வார்த்தைகளை மகா குற்றமாகக் கூறுகிறார் சீதை.<ref>ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்; ஸூந்தர காண்டம்;ஸர்க்கம் 38; லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி.) லிட்.; பக்கம்; 187</ref>
 
=== ராமன் மாமிசம் தின்றான் என்பதற்கு எடுத்துரைத்த நிகழ்வுகள் ===
ஐந்து நகம் உள்ள பிராணிகளுக்குள் முள்ளம் பன்றியும், நாயைக் கொல்லும் பன்றியும், முயலும், ஆமையும், உடும்பும், பிராமணர்கள் புசிக்க தகுந்தவை. அப்படி இருக்க என்னை ஏன் கொன்றாய் என்று வாலி ராமனைப் பார்த்து கேட்டார்<ref>அனந்த இராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் சருக்கம் 17</ref><br /> காட்டு பன்றி, ரிஷ்யம், பிருஷதம், மகாகுரு என்ற பெரிய மிருகங்களையெல்லாம் கொன்று தின்றதாக<ref>வால்மீகி இராமாயணம், சருக்கம் 52,55,56</ref> வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது
 
==படக்காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/இராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது