இழான் பியர் சோவாழ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
சோவாழ்சு பாரீசு நகரில் அக்டோபர் 21, 1944 இல் பிறந்தார். [[இலூயி பாசுச்சர் பல்கலைக்கழகம்|இலூயி பாசுச்சர் பல்கலைக்கழகத்தில்]] [[இழான் மாரீ இலேன்]] (Jean-Marie Lehn) வழிகாட்டலில் முனைவர்ப் பட்டம் பெற்றார். முனைவர்ப்பட்ட ஆய்வில் முதன்முறையாக கிறிப்டாண்டு எனக்குறிக்கப்பெறும் [[பல்லீந்தணைவி]]களை உருவாக்கிக் காட்டினார்<ref>B. Dietrich, J. M. Lehn, J. P. Sauvage, "Les Cryptates" Tetrahedron Letters, 1969, Volume 10, Issue 34, Pages 2889-2892.{{DOI|10.1016/S0040-4039(01)88300-3}}</ref>. இழான் மாரீ இலேன் இத்துறையில் வல்லுனர் இவர் 1987 இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்.
 
சோவாழ்சு நிறைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிப் புகழ்பெற்றவர். மின்வேதிய முறையில் கரிம ஈராக்சைடு (கார்பன்-டை-ஆக்சைடு, CO<sub>2</sub>) சிதைவு, ஒளிச்சேர்க்கை வினைய நடுவம் (photosynthetic reaction center)<ref>Collin, J. P. and Sauvage, J. P., "Electrochemical reduction of carbon dioxide mediated by molecular catalysts", Coord. Chem. Rev., 1989, 93, 245-268. {{DOI|10.1016/0010-8545(89)80018-9}}</ref> ஆகிய துறைகளில் ஆய்வு செய்திருக்கின்றார். மூளக்கூறுகள்மூலக்கூறுகள் ஒன்றோடொன்று இயந்திரவகையாக பிணையும் விதமாக அமைப்பது பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கின்றார். கயிற்றில் முடிச்சுகள் போடுவதுபோல மூலக்கூறுகளில் முடிச்சுகள் போல அமைக்கும் விதங்களையும் ஆய்வு செய்திருக்கின்றார்<ref>Dietrich-Buchecker, C.; Jimenez-Molero, M. C.; Sartor, V. and Sauvage, J.-P., "Rotaxanes and catenanes as prototypes of molecular machines and motors", Pure and Applied Chemistry, 2003, volume 75, pp. 1383-1393.</ref>. மூலக்கூற்று முடிச்சுகளை நாட்டேன் (knotane) என்றும் குறிக்கப்பெறுகின்றது.
 
பிரான்சிய அறிவியல் அக்காதெமியில் மார்ச்சு 26, 1990 அன்று தொடர்புகொள் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார், பின்னர் நவம்பர் 24, 1987 இல் உறுப்பினராக உயர்ந்தார். இவர் தற்பொழுது இசுற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்றப் பேராசிரியராக இருக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/இழான்_பியர்_சோவாழ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது