உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
Name: U. K. Sharma<br>
DOB: 03 March 1944
 
==என் கருத்து==
அண்மையில் இலங்கை நண்பரொருவர் இங்கு வந்திருந்தார். அவருடனும் இங்குள்ள இரு நண்பர்களுடனும் மயிலாப்பூரில் ஒரு உணவகத்தில் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தோம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பரிமாறுபவர் சாதம் போட வந்தார். இலங்கை நண்பர் "காணும், காணும்" என்று சொன்னார். மற்ற நண்பர் "எதைக் காணோம்?" என்று கேட்டார். எனக்கு சிரிப்பு வந்தது. "இலங்கைத் தமிழில் 'காணும்' என்றால் 'போதும்' என்பது பொருள்" என நண்பருக்கு விளக்கினேன். இலங்கை நண்பர் சொன்னது புரியாத சர்வர் சோற்றை அள்ளிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்.
 
இதே இலங்கை நண்பருடன் மின்சார ரயிலில் போய்க்கொண்டிருந்தேன். ஒருவர் வந்து நண்பரிடம் "கொஞ்சம் நகருங்க" என்றார். நண்பர் என்னைப் பார்த்து "ஏதோ இடம் (நகர்) பற்றிக் கேட்கிறார் போல இருக்கு. நீங்கள் கதையுங்கோ" என்றார். நான் சிரித்து விட்டு "இல்லை, அவர் உங்களைக் கொஞ்சம் தள்ளி உட்காரச் சொல்கிறார்" என்றேன்.
 
இதை ஏன் சொல்கிறேன் என்றால், எல்லோரும் பேசுவது தமிழ் தான் என்றாலும், சிலசமயங்களில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. இரண்டு நாடுகளிலும் தொடர்பு இருப்பதால் எனக்கு இது புரிகிறது.
 
விக்கி நடைமுறைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளன. ஆனால் எந்த ஒரு விடயத்திலும் அவர்கள் It is a generally accepted standard that editors should attempt to follow, though it is best treated with '''common sense''', and '''occasional exceptions''' may apply. ''[Bold is mine]'' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏனென்றால் எல்லா நாடுகளிலும் ஒரே விதிகளைக் கடைப்பிடிக்க முடியாது. அந்தந்த நாட்டு நிலவரத்தை அங்குள்ள எடிட்டர்கள், நிர்வாகிகள் நன்கு அறிந்திருப்பார்கள். ஆகவே அவர்கள் 'காமன்சென்ஸ்' எனப்படும் பொது அறிவை பயன்படுத்தி அவ்வப்போது விலக்கு அளிக்கலாம் என்பதனாலேயே அவ்வாறு எழுதியிருக்கிறார்கள்.
 
ஆங்கில விக்கியில் ஒரு குறிப்பிட்ட நாடு, பண்பாடு பற்றிய கட்டுரைகளை பொதுவாக அந்தந்த நாட்டு எடிட்டர்கள், நிர்வாகிகள் கவனித்துக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கிறது என்ற ஒரே காரணத்தால் ஆங்கிலம் தெரிந்த எல்லோரும் அதற்குள் தங்களை நுழைத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த நாட்டவரல்லாதவர்கள் ஏதேனும் தொழினுட்ப மாற்றம் இருந்தால் செய்வார்கள், ஆனால் கட்டுரையின் பொருளடக்கத்திற்குள் போக மாட்டார்கள். அப்படியும் ஏதேனும் சந்தேகம் வந்தால் அந்த நாட்டு நிர்வாகி கவனிக்கட்டும் என பேச்சு பக்கத்தில் குறிப்பு எழுதிவிடுவார்கள்.
 
'''தமிழ் விக்கியிலும் நாகரிகமான அந்த நடைமுறையைப் பின்பற்றுவது நல்லது என்பது என் கருத்து.'''
 
 
==வானொலி ஆர்வலர்==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Uksharma3" இலிருந்து மீள்விக்கப்பட்டது