பக்த துளசிதாஸ் (1947 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 32:
==கதைச்சுருக்கம்==
அத்தினாபுரத்தில் வாழும் இராம பக்தர் ஆத்மாராமின் (''மாஸ்டர் கரூட்'') கனவில் இராமர் தோன்றி "இராமாயணத்தைத் தமிழில் இயற்றுவதற்காக வால்மீகியே உன் மகனாகப் பிறப்பார்," என்று சொல்லி மறைகிறார். இதன்படி ஆத்மாராமுக்கு துளசிதாஸ் (''பி. எஸ். ராஜா அய்யங்கார்'') என்ற மகன் பிறக்கிறான். சிற்றன்னையின் கொடுமைக்கு ஆற்றாது ஓடி வந்து விட்ட தாசி மமதாவின் மகள் ரத்னாவை (''லட்சுமி சங்கர்'') கோவிலில் சந்திக்கும் ஆத்மாராம் அவளை தம் வீட்டுக்குக் கூட்டி வந்து தனது பெண்ணாக வளர்க்கிறார். சிறு வயதிலேயே துளசிதாசும், இரத்னாவும், தங்களை இராமனும் சீதையுமாகப் பாவித்துப் பழகி வருகின்றனர். அவர்கள் பெரியவர்களான போது காதலர்களாகிறார்கள்.<ref name=pp0748/>
 
இராமாயணத்தை இயற்றுவதற்காகப் பிறந்த தன் மகன் மோகவலையில் சிக்கி விட்டானே எனக் கவலையுற்ற ஆத்மாராம் முடிவில் ரத்னாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அவரின் வேண்டுகோளின் படி, ரத்னா துளசிதாசை நிராகரித்து விட்டு, சந்நியாசனியாகக் காலம் கழிக்கிறாள். துளசிதாசும் ஊரூராகத் திரிந்து விட்டு காசியில் தங்கியிருந்த போது துளசிதாசை சிவபக்தராக்க முயன்ற பட்டேசுவரரின் (''சி. வி. வி. பந்துலு'') வெறுப்புக்கு ஆளாகிறார். பட்டேசுவரரின் மாணவரான ராமசாத்திரியும் (''ஜோக்கர் ராமுடு'') ராமபக்தனாகிறார்.<ref name=pp0748/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பக்த_துளசிதாஸ்_(1947_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது