குளொனொஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி பகுப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 4:
புவியிடங்காட்டிகளைத் தயாரிப்பவர்கள் புவியிடங்காட்டிச் செய்மதிகளுக்கு மேலதிகமாக குளொனொஸ் செய்மதிகளூடாக புவியின் இடங்களை பல மேலதிக செய்மதிகள் இருப்பதால் விரைவாகவும் துல்லியமாகவும் வழங்கமுடிவதுடன் பொதுவாக பல கட்டிடங்கள் உள்ள இடங்களில் இதன் மூலமாக சேவையினைத் தடங்கல் இன்றிப் பெற்றுக்கொள்ள இயல்கின்றது. திறன்பேசிகளும் இதையொத்த சிப் (chip) களைப் பாவித்து 2015 ஆம் ஆண்டில் இருந்து புவியிடங்காட்டிகளுக்கு மேலதிகமாக குளொனொசின் சமிக்கைகளையும் பெற்று இடங்களைக் காட்டுகின்றது. 2012 ஆம் ஆண்டில் இருந்து திறன்பேசிகளில் புவியிடங்காட்டிகளுக்கு அடுத்தபடியாக குளொனொஸ் செய்மதிகளே பயன்படுத்தப்படுகின்றது.
 
குளொனொசின் விருத்தியானது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினால்]] [[1976]] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 12 அக்டோபர் 1982 முதல் பல்வேறு ராக்கெட்டுகளினால் செய்மதிகள் ஏவப்பட்டு 1995 ஆம் ஆண்டு குளொனெஸ் செய்மதித் தொகுதியானது முழுமையாக்கப்பட்டது. 90 களின் இறுதிக் காலகட்டத்தில் இதன் செய்மதிகளின் எண்ணிக்கையானது படிப்படையாக குறையத் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டில் உருசிய அதிபர் வலாடிமிர் புட்டினின் ஆட்சிக்காலத்தில் இதை மீள்விக்குத் திட்டமானது அரசினால் முன்னுருமைப் படுத்தப்பட்டதுடன் இதற்குரிய நிதி ஒதுக்கீடும் கணிசமாக அதிகரிக்கப்பட்டது. 2010 இல் உருசிய அரசின் வான் முகவர் அமைப்பில் 3 இல் 1 பங்கு நிதி இத்திட்டத்திற்கே பயன்படுத்தப்பட்டது.
 
2010 ஆம் ஆண்டில் உருசிய நிலப்பரப்பில் 100% இச்செய்மதியின் சமிக்கைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகியது. 2011 ஆம் ஆண்டில் இதன் சுற்றுவட்டில் 24 செய்மதிகளும் முழுமையாக்கப்பட்டது இதன் மூலம் உலகளாவிய ரீதியின் இச்செய்மதியில் இருந்து சமிக்கைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகியது. குளொனொஸ் செய்மதிகள் பலவகையில் மேம்படுத்தப்பட்டு தற்போதைய பிந்தைய செய்மதிகள் குளொனொஸ்-கே என்று அழைக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:சோவியத் விண்வெளிப் பயணங்கள்]]
[[பகுப்பு:சோவியத் கண்டுபிடிப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குளொனொஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது