திருக்கேதீச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 37:
'''திருக்கேதீச்சரம்''' அல்லது '''திருக்கேதீசுவரம்''' [[இலங்கை]]யின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு [[சிவன்]] [[கோயில்|கோயிலாகும்]]. இது [[மன்னார்]] மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த [[துறைமுகம்|துறைமுக]] நகரமான [[மாதோட்டம்|மாதோட்ட]]த்தில் அமைந்துள்ளது. [[நாயன்மார்]]களின் [[தேவாரம்|தேவார]]ப் பாடல் பெற்ற இரண்டு [[இலங்கை]]த் தலங்களில் இதுவும் ஒன்றாகும். [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரும்]] இத்தலத்தின் மீது [[பதிகம்]] பாடியுள்ளார்கள்.
 
=== வரலாற்றுச் சுருக்கம் ===
[[கேது]] வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்{{fact}}. இக்கோயில் [[மாதோட்டம்]] நகரில் அமைந்துள்ளது. [[சூரபதுமன்|சூரபதுமனின்]] மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள [[பாலாவி]]த் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.
 
இத் தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.
வரிசை 54:
பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் [[கோயில்]] சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.
 
போத்துக்கீசரால் தகர்க்கப்பட்ட இவ்வாயக் கற்களையுஞ் சிற்பங்களையும் கொண்டு மாதோட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது தேவாலயத்திற்கு அடிக்கலாகப் பயன்படுத்தப்பட்ட உண்மையைத் துலக்கா நிற்கின்றது.
 
அழித்துச் சிதைக்கப்பட்டிருந்த இத் திருடத்தை விடிவெள்ளியின் அவதாரம் செய்த திருப்பெருநதிரு அருள்மிகு யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் அந்நிலத்தை வாங்கி சைவசயிகளின் பெருமையையும் புகழும் நிலைக்கவேண்டுமென்னும் பேரவாவினால் தூண்டுதல் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்த பெருமை ஐயா அவர்களையே சாரும். ஐயா அவர்களின் ஆசையை நிறைவுசெய்ய முயன்ற பெரியார்கள் கொழும்பு தம்பையா முதலியார், சுபைதார் வைத்திலிங்கம், புகையிரத தபால் ஒப்பந்தக்காரர் மாத்தளை ஆசைப்பிள்ளை ஆகியோரின் அருமுயற்சி அரசினரின் அடாத்தன்மையால் நிறைவுபெறவியலாது போயிற்று. தொடர்ந்து 1890இல் தகைசான்ற சைவப்பெரியார்களின் பெருமுயற்சியால் அக்காலத்து அரச அதிபர் அந்நிலத்தை சைவர்கட்கே வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டார்.
 
காலப்போக்கில் இத்திருகோயிலிற்கென ஓர் சபை உருவாக்கப்பட்டு அதன் முதலாவது தலைவராக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களும் பொதுச் செயலாளராக நீராவியடி பண்டிதர் அ.சிற்றம்பலம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு உயர்ந்த பல குறிக்கோளுடன் சபை செயற்பட யாப்பு அமைக்கப்பட்டது
 
#சைவக் கொள்ககட்கு அமைய மறுசீரமைக்கப்படுதல். ஆலயத்தையுஞ் சொத்துக்களையும் யாதொரு குறையுமின்றிப் பாதுகாத்தல்.
வரிசை 66:
போன்ற பல அரிய செயல்க்ளைப் புரியச் சபையத் தயார்படுத்தல் போன்ற உயரிய செயல்களை விரைந்து நடைமுறைப்ப்படுத்த முயற்சிப்பதென உறுதி பூணப்பட்டது. 10 பெப்ரவரி 1951இல் பொது உடமைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சபையாகத் திகழ்ந்தது. சபையாகப் பதிவுசெய்யப்பட்டதன் பின்பும் கோயில் உருமைகள் நாட்டுக்கோட்டை நகரப் பெரியார்களிடமே இருந்து வந்தது. காலப்போக்கில் 14 செப்ரம்பர் 1951இல் நாட்டுக்கோட்டை நகரத்தார் உளமகிழ்வுடனும் நல் இணக்கத்துடனும் திருப்பணிச் சபையாரிடம் பரிபாலனம் கைமாற்றப்பட்டது.
 
பொறுப்புக்கள் கையேற்கப்பட்ட காலம் முதல் அரிய பெரிய திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொழும்பு பழைய, புதிய கதிரேசன் கோயில் திருப்பணிச் சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் அறங்காவலர்களாகவும் (ஐவர்) பஞ்சாயத்தவர்களாகவும் நியமனம் பெற்று சபையை நடாத்திவரத் திருக்கேதீச்சரத் திருப்பணிப் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
 
இச்சபையின் தீர்மானப்படி காசிவாசி சிவஸ்ரீ ஈசான சிவாச்சாரியார், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம், கட்டடக்கலைஞர் வி.நரசிம்மன் ஆகியோரின் ஆகம விதிகளுக்கமைவான அறிவுறுத்தல்களுடன் தமிழ்நாடு திருவாளர்கள் செல்லக்கண்ணு ஸ்தபதியார், மு.வைத்தியநாத ஸ்தபதியார் ஆகியவர்களால் முறைப்படி சுவாமி, அம்பாள் கருவறைகள் கருங்கல்லாலும், சுதை, காரைகளாலும் விமான வேலைகளும் கோபுரங்களும் உலக சைவப்பெருமக்களின் பேருதவி கொண்டு அமைக்கப்பட்டது. இத்திருத்தலம் உருவாக அருள்வாக்கு நல்கிய நல்லூர் திருப்பெருந்திரு ஆறுமுகநாவர் ஐயா அவர்கள் "திருக்கேதீச்சரம் எனுந் தேன்பொந்து ஒன்று உளது. அங்கு மருந்தொன்று மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள்" என அருள்ஞானசம்பந்தர் சுட்டிக்காட்டியது போல அறிவுறுததருளினார்.
வரிசை 72:
ஐயா அவர்களின் அறிவுறுத்தல் மேற்கொண்டு விடத்தல்தீவு வேலுப்பிள்ளை அவர்களும், முதல் குரல் கொடுத்த சைவபரிபாலன சபையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
முன்பு ஆலயமிருக்கும் திருவிடத்தை சைவசமயத்தவர்கள் கையகப்படுத்த விரும்பாதநிலை மாறி மாவட்ட அதிபரின் முன்மொழிவுக்கமைய ஏலத்தில் விடப்பட்டு காடுமண்டிய நிலத்துடன் 43 ஏக்கர் 3 றூட் 33 பேச் காணி நாட்டுக்கோட்டை நகரத்துச் செம்மல் சைவச் சான்றாளர் ராம அரு.அரு.பழனியப்பச் செட்டுயாரான பெருமகனாரால் யாழ் செயலகத்தில் 3, 100/= ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டாமை சைவர்களின் பெருமைக்குரியதொன்றாயிற்று.
 
1894ஆம் ஆண்டு வண்ணைச் சைவப்பெரியார் சித.மு.பசுபதிச் செட்டியார், திருவாளர்கள் இ.இராமுப்பிள்ளை வைத்தியர் வை.ஆறுமுகம் பிள்ளை, தா.இராகவப்பிள்ளை ஆகியோரின் அயராத முயற்சியினால் 13 ஜூன் 1894 அன்று பழைய ஆலயம் இருந்த திருவிடமும், தீர்த்தக் கிணறும் முன் நிறுவப்பட்டிருந்த லிங்கம் ஒன்றும் திருநந்தி சோமாஸ்கந்தர், கணேசர் ஆகிய மூர்த்திகளின் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. இவற்றை நிறுவிப் பூசை அர்சனை அபிடேகங்கள் இயற்ற வேண்டி இன்றுள்ள கோயிலிருக்குமிடத்தில் சிறு கோயிலமைத்து கண்டெடுக்கப்பட்ட மூர்த்திகளை உரிய இடங்களில் நிறுவி 28 ஜூன் 1903 ஆம் ஆண்டில் நல்வேளையில் முதலாவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுச் சிறப்பாகச் செய்யப்பட்டது.
வரிசை 78:
மூலக் கருவறையில் எழுந்தருள வைக்கப் பெற்ற [[சிவலிங்கம்]] [[காசி]]யிலிருந்து வருவிக்கப்பட்டதென திரு இராமேச்சர வரலாற்றுத் தரவினாலறிய முடிகின்றது
 
இதனைத் தொடர்ந்து பல திருப்பணிகளாற்றப்பட்டு 1920ஆம் ஆண்டிலும் மற்றோர் திருக்குடமுழுக்கு விழாச் செய்யப்பட்டது.
 
புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் காடடர்ந்து அழிந்த நிலைகண்டு நாட்டின் சைவப் பெருமக்களின் உள்ளத்தை விழிப்படைவும் பழைய உயர் நிலைக்குத் திருக்கோயில் வளரவும் வேண்டுமென்ற நினைப்பினாலும் உந்துதலினாலும் 1948 ஆம் ஆண்டு இத்திருவிடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினரால் சைவப் பெரு மாநாடொன்று கூட்டப்பட்டது. இம் மாநாட்டைக் கூட்ட முன்னின்று உழைத்த பெருமக்கள் வரிசையில் வேலைணையூர் வி.கே. செல்லப்பாச் சுவாமியார், [[திருவாசக முதல்வர் சி.சரவணமுத்து அடிகள்]], சட்டத்தரணி சு.சிவசுப்பிரமணியம் ஆகியோராவர்
வரிசை 100:
இக்கால எல்லையில் ஐந்து திருத்தேர்கள் முயன்று உருவாக்கப்பட்டு வீதிவலம் வந்தகாட்சிதனை அருளடியார்கள் மறந்திருக்கமுடியாது. முதற்பெருந் தேரில் உலாவர உலகிலேயே பெரிய சோமாஸ்கந்த தெய்வத்திருவுருவம் வடிக்கப்பட்டு உலாவந்த காட்சி அருளாளர்களால் என்றும் மறக்ககமுடியாத காட்சியாகும்.
 
புதுமியான சிற்பங்களைக் கொண்ட திருக்கோயிலையுந் திருத்தேர்களையும் அமைத்த பெருமை தமிழ்நாடு [[மாமல்லபுரம்]] அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி வினைஞர்களையும் பழனி சிற்பக்கலாவல்லுனர்களையும் யாழ் திருநெல்வேலி ஆறுமுகம் சீவரத்தினம் எனும் சிற்பக்கலா வல்லுனர்களையும் சார்ந்ததென்றால் அது மிகையாகாது.
 
இத்துணை சிறப்புக்கள் அமைந்ததாகவும், எந்தக்குறையுமில்லாத எல்லாமடங்கிய தன்னிறைவு பெற்ற பெருங்கோயிலாக அமைக்க வேண்டுமென்ற ஆர்வங்கொண்டு அல்லும் பகலும் கோயிலே தன் சிந்தையாகக் கொண்டு கோயில் பற்றிய தரவுகளைக் காட்டும் நூல்களை நுணுகி ஆராய்து சிவாகம நடைமுறை பிழையாது அமைத்திட நாளும் பொழுதும் சிந்திதிதுச் செயலாற்றிய ஆற்றி வருகின்ற சட்ட வல்லுனர் சைவப் பெரியார் இ.நமசிவாயம் அவர்தம் சேவையையும் அவருடன் உறுதுணையாய் பணியாற்றும் அன்பர்களின் பணிகளையும் நன்றியுள்ள சைவ உலகம் என்றும் மறாவதிருக்குமென நம்புவதில் தவறேது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
==மேற்கோள்கள்==
<references/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.
 
வரி 114 ⟶ 111:
* [[திருக்கேதீச்சரம்]]
* [[தொண்டேச்சரம்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
{{Hindu temples in Sri Lanka}}
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருக்கேதீச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது