ஆயர் (கிறித்துவ பட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 6:
"ஆயர்" என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையான "Bishop" என்னும் ஆங்கிலச் சொல் ἐπίσκοπος (epískopos) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதற்கு "மேற்பார்வையாளர்", "கண்காணிப்பாளர்" (supervisor, overseer) என்பது நேரடிப் பொருளாகும். கிறித்தவ சபைகளில் மேற்பார்வைப் பொறுப்புக் கொண்டவர்களுக்குப் பொதுவாக "ஆயர்" என்னும் பெயர் பொருந்தும்.
 
"ஆயர்" என்றால் "(ஆ = பசுக்களைஆடுகளை) மேய்ப்பவர்" என்பது நேரடிப் பொருள். அது கிறித்தவ சபையின் மக்களை வழிநடத்துபவர் என்று பொருள்தரும். "ஆயர்" என்னும் சொல்லுக்கு நேரிணையான ஆங்கிலச் சொல் "pastor" (shepherd) என்பதும் விவிலியத்தில் வேரூன்றியதாகும். [[இயேசு]] தம்மை "நல்ல ஆயர்" (Good Shepherd) என்று அறிமுகப்படுத்துகிறார். அவரிடத்தில் நம்பிக்கை கொண்டு அவரால் வழிநடத்தப்படும் "ஆடுகளை" அவர் கண்காணித்துக் காக்கிறார். [[யோவான்|யோவான் நற்செய்தியில்]] இயேசு இவ்வாறு கூறுகிறார்:
{{cquote|நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் ([[யோவான்|யோவான் 10:11-15]].)}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஆயர்_(கிறித்துவ_பட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது