ஜெமினி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி ஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் எனும் புதிய கட்டுரை ஆரம்பிக்கப்பட்டது!
வரிசை 31:
அவருக்கு ஏற்கனவே [[பத்மஸ்ரீ]], நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "''காதல் மன்னன்''" என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.
 
== ஜெமினி கணேசனின் திரை வரலாறு ==
=== ஆரம்ப காலத் திரை வாழ்க்கை ===
 
== ஆரம்ப காலத் திரை வாழ்க்கை ==
திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணியாற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தபோது, திரையுலகுடனான அவரது வாழ்க்கைப் பயணம் துவங்கியது. பின்னாளில் எந்த நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் அவர் நாயகனாக நடித்தாரோ, அதே நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு வருபவர்களை நேர்காணல் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்!
 
வரி 44 ⟶ 43:
காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.
 
=== இயக்குனர்களின் நாயகன் ===
 
ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், [[கே.எஸ்.கோபாலகிருட்டிணன்|கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்]], [[சிறீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]], [[கே.பாலச்சந்தர்]], பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.
 
வரி 54 ⟶ 52:
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "[[நான் அவனில்லை (1974 திரைப்படம்)|நான் அவனில்லை]]" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.
 
=== பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள் ===
 
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற [[சிவாஜி கணேசன்]] முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.
 
வரி 62 ⟶ 59:
தமக்குப் பின்னர் திரைக்கு வந்த [[ஜெய்சங்கர்]], [[ஏவி.எம்.ராஜன்]]. [[முத்துராமன்]] ஆகியோருடனும் அவர் பல படங்களில் இணைந்து நடித்தார்.
 
=== திரை நாயகியர் ===
 
எந்த ஒரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாகப் பொருந்தி விடும் திறன் கொண்டமையாலேயே காதல் மன்னன் என்றும் அவர் அறியப்பட்டார். அவருடன் மிக அதிகமான படங்களில் நடித்தவர்களில் சாவித்ரி, அஞ்சலிதேவி, பத்மினி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
 
வரி 72 ⟶ 68:
அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
 
=== பின்னணிப் பாடகர்கள் ===
 
பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய [[டி. எம். சௌந்தரராஜன்|டி.எம். சௌந்தரராஜன்]] ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த [[ஏ. எம். ராஜா]]. இரண்டாமவர், பன்மொழி வித்தகரான [[பி. பி. ஸ்ரீநிவாஸ்]]. இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம். ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப் பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
 
வரி 80 ⟶ 75:
1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி. என்று அன்புடன் அழைக்கப்படும் [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார்.
 
=== குணச்சித்திர வேடங்கள் ===
 
ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா".
 
சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே [[கமல்ஹாசன்]] நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் [[உன்னால் முடியும் தம்பி]] என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான [[அவ்வை சண்முகி]].
 
== நடித்த திரைப்படங்களின் பட்டியல் ==
= மரணம் =
 
=== தமிழ்த் திரைப்படங்கள் ===
சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இயற்கை எய்தினார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்ட்டது.
=விரிவான தரவுகளுக்கு - {{main| ஜெமினி கணேசன் நடித்த புகழ் பெற்றதமிழ்த் திரைப்படங்கள் சில =}}
 
= ஜெமினி கணேசன் நடித்த புகழ் பெற்ற திரைப்படங்கள் சில =
[[படிமம்:Oldgemini.jpg|thumb|right|250px|ஜெமினி கணேசன் சாந்தி நிலையம் திரைப்படத்தில் காஞ்சனாவுடன்]]‎
* மிஸ் மாலினி
* தாயுள்ளம்
* பெண்
* மளாணனே மங்கையின் பாக்கியம்
* கணவனே கண் கண்ட தெய்வம்
* மிஸ்ஸியம்மா
* மாமன் மகள்
* வஞ்சிக்கோட்டை வாலிபன்
* [[பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)|பார்த்திபன் கனவு]]
* கல்யாணப்பரிசு
* கொஞ்சும் சலங்கை
* தேன் நிலவு
* சுமைதாங்கி
* பாசமலர்
* பார்த்தால் பசி தீரும்
* பாதகாணிக்கை
* களத்தூர் கண்ணமா
* கற்பகம்
* சித்தி
* சின்னஞ்சிறு உலகம்
* பணமா பாசமா
* ராமு
* இரு கோடுகள்
* புன்னகை
* கண்ணா நலமா
* தாமரை நெஞ்சம்
* நான் அவனில்லை
* உன்னால் முடியும் தம்பி (தெலுங்கில் ருத்ரவீணா)
* [[அவ்வை சண்முகி]]
 
= பிற மொழிப் படங்களில் ஜெமினி கணேசன் =
 
=== பிற மொழிப் படங்கள் ===
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவும் பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார்.
 
வரி 130 ⟶ 92:
[[படிமம்:Gemini stamp.jpg‎|thumb|right|200px|ஜெமினி கணேசன் நினைவாக வெளியிடப்பெற்ற அஞ்சல் தலை]]
 
== அஞ்சல் தலை வெளியீடு ==
தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் அவர்கள்ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
 
தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ் ரேவதி சுவாமிநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
 
= சுவையான செய்திகள் சில =
 
== துணுக்குகள் ==
* ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ''ஆர்.கணேஷ்'' என்றே இடம் பெற்றது. [[பராசக்தி (திரைப்படம்)]] மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.
* ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.
வரி 143 ⟶ 103:
* ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான '''ஹம்லோக்''' சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.
* இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த [[ரேகா]] தாம் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.
* ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகவில்லை அல்லது புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக [[நினைவெல்லாம் நித்யா]] என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று [[எய்ட்ஸ்]] பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.
* ஜெமினி கணேசனின் மகளான [[கமலா செல்வராஜ்]] செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.
 
== மறைவு ==
= மேலும் காண்க =
சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இயற்கை எய்தினார்காலமானார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்ட்டது.
* [[ரேகா]]
 
== வெளியிணைப்புகள் ==
= புற இணைப்புகள் =
* {{imdb name|id=0304261|name=ஜெமினி கணேசன்}}
* [http://www.hindu.com/mag/2005/04/03/stories/2005040300560500.htm ஜெமினியைப் பற்றி அவரது மகள் ஜெயா ஸ்ரீதர்]
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது