திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 97:
தீவிர மேலாண்மை முறைகளை பயன்படுத்தி உற்பத்தியை இன்னும் பெருக்க இயலும். பெரிய நீர் நிலைத் தேக்கங்களில் வலையினால் அமைக்கப்பட்ட கூண்டுகளில் திலாப்பியா வளர்க்கும் முறை பல நாடுகளில் பின்பற்றப்படுத்தப்படுகிறது. நீர் மின்சார நிலையங்களில் அதிவேகமாக வெளியாகும் நீரை காங்க்ரீட் தொட்டிகளில் செலுத்தி அந்த தொட்டிகளில் திலாப்பியா வளர்ப்பது கோஸ்ற்றா ரிக்கா, ஹாண்டூரஸ் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற குளிர் பிரதேசங்களில் பசுமைக்குடில் அமைத்து அதற்குள் தொட்டிகளில் நீரை மீள்சுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திலாப்பியா வளர்க்கப்படுகிறது. மேற்கண்ட முறைகளில் ஒரு சதுர மீற்றர் தண்ணீர்ப் பரப்பளவில் 10 முதல் 100 கிலோ மீன் வரைக்கும் உற்பத்தி செய்யும் சாத்தியம் உள்ளது.
== விமர்சனம் ==
இன்று தமிழக நீர்நிலைகளில் இந்த மீனே ஆதிக்கம் செலுத்துவதால் மற்ற பாரம்பரிய மீன்கள் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுவருகிறது. இந்தத் திலேபியா மீன்கள் பாரம்பரிய மீன்களுக்குப் பரம எதிரியாகவிஎதிரியாகி உள்நாட்டு மீன் இனத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. இம்மீன்கள் தண்ணீர் எவ்வளவு மாசுபட்டு இருந்தாலும் அதில் வாழும். பாரம்பரிய மீன்கள் சாப்பிடும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடும். மேலும் பாரம்பரிய இன மீன்களின் முட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிடுகின்றன. இனப்பெருக்கத்திலும் இவற்றின் அக்கறை அதிகம். தன்னுடைய மீன் குஞ்சுகளில் 70 முதல் 80 சதவீதத்தை இவை காப்பாற்றி விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நாட்டு இன மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை மாதிரியான உணவுகளை உண்ணும். ஆனால், இந்தத் திலேபியாவுக்கு உணவில் எந்த விதிவிலக்கும் கிடையாது. எல்லாவற்றையும் சாப்பிடும். இதே நிலை நீடித்தால், கடைசியில் திலேபியா மட்டுமே மிஞ்சும். திலேபியாவை ஒரு பெரு நோய் தாக்கினால் நம் பகுதிகளில் மீன் இனமே ஒட்டுமொத்தமாக அழியும் பேராபத்தும் இருக்கிறது என குற்றச்சாட்டு உள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF/article5828160.ece | title=மீன்களையும் பாரம்பரியத்தையும் அழித்த ஜிலேபி | publisher=தி இந்து | date=2014 மார்ச் 25 | accessdate=27 மே 2016}}</ref>
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது