டி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 1:
[[File:DBalasubramaniam.jpg|thumb|right|1940களில் டி. பாலசுப்பிரமணியம்]]
'''டி. பாலசுப்பிரமணியம்''' தமிழ்த் திரைப்பட நடிகராவார். ஒரு எழுத்தாளராகவும் தமிழ்த் திரையுலகில் பங்களித்தார். [[பொன்னி (1953 திரைப்படம்)|பொன்னி]] திரைப்படத்தின் வசனம் எழுதுவதில் இவரின் பங்கும் இருந்தது. இந்தத் திரைப்படத்திற்காக சில பாடல்களையும் எழுதியிருந்தார்.<ref name="THRGP">{{cite news | url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/ponni-1953/article5433529.ece | title= Ponni (1953) |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=7 டிசம்பர் 2013 | accessdate=30 செப்டம்பர் 2013}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
தமிழத் தாய்மொழியாகக் கொண்ட டி. பாலசுப்பிரமணியம் இராயபுரம் ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரை படித்தார். குடும்ப வறுமை காரணமாக தகப்பனார் அவரது சகோதரர் வசிக்கும் ஜனாவரத்தில் சென்று வசித்து வந்தார். தாயாரும், பாட்டியாரும் முதலில் ஜார்ஜ் டவுனிலும், பின்னர் இராயபுரத்திலும் வசித்து வந்தனர். இங்கு தெலுங்கு பேசும் குடும்பங்கள் இருந்ததால், தெலுங்கை ஓரளவு பேசக் கற்றுக் கொண்டார். பாலசுப்பிரமணியத்திற்கு ஒன்பதரை வயதாகும் போதே தந்தை காலமானார். இதனால் பாலசுப்பிரமணியம் மீது குடும்ப சுமை வீழ்ந்தது. சிறு தொழில் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தோல்கிடங்கு, பூட்டுப்பட்டரை, மளிகைக் கடை, என சில இடங்களில் பணியாற்றினார். அதன் பின்னர் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் மாதம் ஏழு ரூபாய் சம்பளத்தில் வேலையில் அமர்ந்தார். சில காலத்தில் அங்கிருந்து விலக்கப்பட்டார். தந்தை பூசை செய்து வந்த பிள்ளையார் கோவிலில் பூசை செய்யும் பணி கிடைத்தது.<ref name="PP0449">{{cite journal | title=குணசித்திர நடிகர் டி. பாலசுப்பிரமணியம் | author=ராஜாராம், எம். | journal=பேசும் படம் | year=1949 | month=ஏப்ரல் | pages=பக். 18-33}}</ref>
 
==நாடகங்களில் நடிப்பு==
இந்நிலையில், ஜகன்னாதய்யரின் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையார் சென்னையில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அவர்களின் நாடகம் ஒன்றை தாயாருடன் சென்று பார்த்தார். அக்கம்பனியில் சேர்ந்து நாடகம் நடிக்கும் ஆசை இவருக்கு ஏற்பட்டது. தாயாரின் அனுமதியுடன் கம்பனியில் சேர்ந்தார். அக்கம்பனியில் அப்போது [[கே. சாரங்கபாணி]], பி. டி. சம்பந்தம் போன்ற பலர் நடித்து வந்தனர். ஐந்தாண்டுகள் அக்கம்பனியில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார். ஜகன்னாதய்யருடன் ஏற்பட்ட சிறு தகராறில் சில நடிகர்கள் அங்கிருந்து விலக நேரிட்டது. அதில் பாலசுப்பிரமணியமும் ஒருவர்.<ref name="PP0449"/>
 
== நடித்த திரைப்படங்கள் ==
வரி 23 ⟶ 29:
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது