நொய்யல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==மாசு==
[[படிமம்:Noyyal.jpg‎|500px|thumb|right|<center>நொய்யல் ஆறு </center>]]நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்த ஆறுகளில் ஒன்று. [[கோயம்புத்தூர்]] நகரை கடக்கும் போது அந்நகரின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. [[திருப்பூர்|திருப்பூரை]] கடக்கும் போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து இவ்வாற்றை மிகவும் மாசடையச்செய்கின்றன. சுத்திகரிக்கப்படாத சாயப் பட்டறை கழிவுகளால் அதிக அளவு [[அமிலம்|அமிலங்கள்]] சேர்ந்து திருப்பூருக்கு பின் நொய்யல் ஆறு [[வேளாண்மை]]க்கும் குடிப்பதற்கும் ஆகாத நிலை உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் அமைப்பினர் நொய்யல் ஆற்றை ''இறந்த ஆறு'' என்கின்றனர்.
 
இக்கழிவுகள் எல்லாம் [[ஒரத்துப்பாளையம் அணை]]யில் தேங்கி அப்பகுதியின் நீர் நிலைகளை மோசமாக மாசுபடுத்தியுள்ளன. அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர். ஆற்று நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ள [[இந்திய உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]], சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஆற்றினில் கலக்க வேண்டும் என்றும் சுத்திகரிப்பு வசதி இல்லாத ஆலைகளின் உரிமம் பறிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நொய்யல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது