இராணி மங்கம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎முகலாயர்களுடனான உறவு: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
 
== முகலாயர்களுடனான உறவு ==
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தக்காணம் வரை தனது பேரரசை விரிவு செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தார். செஞ்சிக் கோட்டையில் பதுங்கி இருந்த மராத்திய மன்னன் இராசாராமைக் கைது செய்ய, தம் தளபதி 'சல்பீகார் அலிகான்' என்பவரை அனுப்பினார். சல்பீகார் அலிகான் சுமார் ஏழாண்டு காலம் செஞ்சிக்கொட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை நடந்து கொண்டிருக்கும் போதே மற்ற தமிழக அரசுகளைப் பணிய வைத்துத் திறைப்பொருளைச் செலுத்த படைகளை அணுப்பினான். மைசூர் மான்னரும்மன்னரும் தஞ்சை மராத்தியரும் பணிந்து திறை செலுத்தினர்.<br />
இராணி மங்கம்மாளும் முகலாயர் படை வலிமையையும் தன் படை வலிமையியும் நன்குணர்ந்து முகலாயருக்குப் பணிந்துபோக முடிவு செய்தார். விலையுயர்ந்த பொருள்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி போரைத் தவிர்த்தார். பின் முகலாயர்களின் உதவியால், மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றியிருந்த மதுரையின் பகுதிகளையும் மீட்டார்.
 
== திருவிதாங்கூர்ப் போர் ==
மதுரை நாயக்க அரசுக்கு உட்பட்ட சிற்றரசாக அப்போது திருவிதாங்கூர் அரசு இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் இரவி வர்மா, மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை. மேலும் கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி அழித்தான். எனவே, தளவாய் நரசப்பையா என்பவர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது.
"https://ta.wikipedia.org/wiki/இராணி_மங்கம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது