சு. தியடோர் பாஸ்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977ம் ஆண்டு [[அலிகார்|அலிகாரில்]] நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இக்கட்டுரையும் வேறு சிலவும் சேர்ந்து 1981ல் ''தி மெசேஜ் பியரர்ஸ்'' (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தன. [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] [[பிரிட்டிஷ் இந்தியா|பிரிட்டிஷ் ஆட்சிக்குப்]] பெரிதாக எதிர்ப்பு இல்லை என்று அப்போது பரவலாக நிலவிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் இப்புத்தகம் அமைந்திருந்தது. அதுவரை பயன்படுத்தப் பட்டிராத பல தரவுகளையும், ஆதாரங்களையும் பயன்படுத்தி [[இந்திய விடுதலை இயக்கம்|தேசிய இயக்கத்தில்]] தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரித்த இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் முன்னோடித் தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அவருடைய இரண்டாவது நூல், "பாம்பின் கண்" என்று பொருள்படும், ''தி ஐ ஆஃப் தி செர்பன்ட்'' (The Eye of the Serpent) 1996ல் வெளியானது. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுக நூலான இதற்கு சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தங்கத் தாமரை]] விருது வழங்கப்பட்டது.<ref name="A"/><ref name="B"/>
 
இவை தவிர ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்களை பாஸ்கரன் எழுதியுள்ளார். அவரது கட்டுரைகள் ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுமக்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. திரைப்படங்கள் பற்றி [[பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்]], [[மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்]], [[சிக்காகோ பல்கலைக்கழகம்]] போன்ற பல்கலைக்கழகங்களில் விரிவுரை ஆற்றியுள்ளார். [[பெங்களூர்|பெங்களூரிலுள்ள]] ''நேஷனல் இன்ஸ்ட்டிடூயுட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்'' (மேற்கல்விக்கான தேசிய கல்விக்கழகம்) என்ற ஆய்வுக்கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2000ம் ஆண்டு [[கம்பன் கழகம்|கம்பன் கழகத்தின்]] [[கி. வா. ஜகந்நாதன்|கி.வா.ஜ]] பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 2001இல் [[மிச்சிகன் பல்கலைக்கழகம்|மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்]] (ஆன் ஆர்பர்) தமிழ்த் திரைப்படங்கள் பற்றி கற்பித்தார். 2003 ஆம் ஆண்டுக்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளின்]] நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். 1998-2001 காலகட்டத்தில் [[ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்|ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின்]] இயக்குனராகப் பணியாற்றினார். தற்பொழுது அந்நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.<ref name="B"/><ref name = D>{{cite web|title= An archive for Tamil studies |url=http://www.hinduonnet.com/fline/fl1717/17170650.htm |work=[[Frontline (magazine)|Frontline Magazine]]|date=19 August 2000}}</ref><ref>[http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl_annual_report_2008-09.pdf Roja Muthiah Research Library Annual Report (2008-09)]</ref>
 
பாஸ்கரன் 2010ம் ஆண்டு வெளிவந்த [[அவள் பெயர் தமிழரசி]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சு._தியடோர்_பாஸ்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது