டோனால்ட் டிரம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*விரிவாக்கம்*
வரிசை 23:
}}
'''டோனால்ட் ஜான் டிரம்ப்''' (''Donald John Trump'', பிறப்பு: சூன் 14, 1946) அமெரிக்கத் தொழிலதிபரும், [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். இவர் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|45வது]] [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவராக]] 2017 சனவரி 20 இல் பதவியேற்க உள்ளார். [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]] வேட்பாளராக [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016|2016 தேர்தலில்]] போட்டியிட்டு, [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]] வேட்பாளர் [[இலரி கிளின்டன்|இலரி கிளின்டனை]] 2016 நவம்பர் 9 இல் வென்றார். அமெரிக்க வரலாற்றில் அதிக வயதில் (70) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது அரசுத் தலைவர் இவராவார்.
 
இவர் திரம்பு குழுமத்தின் தலைவராக உள்ளார்.இவருடைய தொழில் வாழ்வில் இவர் உலகமுழுவதும் அலுவலக கட்டடங்கள், சூதாட்ட விடுதிகள், தங்கும் விடுதிகள், கோல்ப் விளையாட்டு திடல்களை அமைத்துள்ளார்
 
இவர் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] பிறந்து வளர்ந்தார், 1968 இல் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் பள்ளியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1971இல் தந்தையின் வீட்டு மனை தொழிலையும் கட்டுமான தொழிலையும் கவனித்தார்.1999 முதல் 2015 வரை அமெரிக்க அழகிப்போட்டி நடத்தும் நிறுவனத்தை நடத்தினார். இவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார். 2000ஆம் ஆண்டு சீர்திருத்தக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மனு செய்துவிட்டு வாக்குப்பதிவுக்கு முன் விலகிக்கொண்டார். 2004 இலிருந்து 2015 வரை என்பிசி தொலைக்காட்சியில் ''தி அப்ரன்டிசு'' (The Apprentice) மெய் தொடரில் நடித்ததுடன் அதன் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். இது இவரை நாடு முழுவதும் அறியச்செய்தது.
 
யூன் 2015இல் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்தார். மே 2016இல் இவரை எதிர்த்த அனைவரும் போட்டியிலிருந்து விலகியதால் யூலை மாதம் குடியரசு கட்சியின் பேரவையில் அதிகாரபூர்வமாக குடியரசு கட்சி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார்.
 
 
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டோனால்ட்_டிரம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது