நா. பொன்னையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 33:
 
==அச்சுத் தொழில்==
பொன்னையா வேளாண்மையில் அதிக ஆர்வம் காட்டாது, பத்திரிகை படிபதில்படிப்பதில் ஆர்வம் கொண்டு அச்சுத் தொழில் கற்க விரும்பினார். அக்காலத்தில் ''சுதேச நாட்டியம்'' எனும் பத்திரிகையை நடத்தி வந்த ஆசுகவி [[கல்லடி வேலுப்பிள்ளை]]யின் அச்சுக்கூடத்தில் அச்சுத் தொழிலைக் கற்றார். அதன் பின்னர் குரும்பசிட்டியைச் சேர்ந்த நல்லையா என்பவர் யாழ்ப்பாண நகரில் நடத்தி வந்த ''தேசாபிமானி'' பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றி தமிழில் போதியளவு ஆற்றல் பெற்றார். அதன் பின்னர் 1910 இல் [[தென்னிலங்கையில் [[களுத்துறை]]யில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி முதலாம் உலகப் போர்க் காலத்தில் 1914 இல் தாமே ஒரு வணிக நிறுவனத்தை நடத்தி வந்தார்.<ref name="Eelakesari010451"/>
 
1918 அக்டோபரில் கதிரிப்பிள்ளை என்பவரின் மகள் மீனாட்சி அம்மாளை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். மூவர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர்.<ref name="Eelakesari010451"/> மகள் புனிதவதி முன்னாள் சட்டமா அதிபர் [[சிவா பசுபதி]]யின் மனைவி ஆவார். இவர் [[சிட்னி]]யில் வசித்து வந்தார்.
வரிசை 42:
 
==பத்திரிகைத் தொழில்==
1930 சூன் 22 இல் [[சிவயோக சுவாமி]]களின் ஆசியுடன் [[ஈழகேசரி]] வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். 1935 முதல் ஈழகேசரின்ஈழகேசரியின் ஆண்டு மலர்களை உயர்ந்த முறையில் வெளியிட்டு வந்தார். 1933 இல் ''Ceylon Patriot'' என்ற ஆங்கில வாரப்பத்திரிகையை எஸ். சி. சிதம்பரநாதன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு நடத்தி வந்தார்.<ref name="Eelakesari010451"/>
 
1941 ஆம் ஆண்டில் ''Kesari'' என்ற ஆங்கில வார இதழை [[ஹன்டி பேரின்பநாயகம்]] என்பவரை ஆசிரியராகக் கொண்டு சில ஆண்டுகள் நடத்தி வந்தார்.<ref name="Eelakesari010451"/>
வரிசை 49:
யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட [[யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்]] அமைப்பில் இணைந்து இளைஞர் மாநாடுகளில் பங்குபற்றினார். மலையாளப் புகையிலை ஐக்கிய வியாபாரச் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் உறுப்பினராகச் சேர்ந்து பங்களித்தார். 1936 முதல் கிராம சங்கத்தில் உறுப்பினராக இருந்து, பின்னர் 1946 முதல் இறக்கும் வரை [[மயிலிட்டி]] கிராமச் சங்கத்தில் தலைவராக இருந்தார்.<ref name="Eelakesari010451"/>
 
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் உணவுப் பற்றாக்குறை நிலவிய போது 1941 இல் [[வயாவிளான்|வயாவிளானில்]] 12 ஏக்கர் காணியை வாங்கி பெருமளவு உணவுப் பொருள் உற்பத்தி செய்தார். அவ்விடத்தில் கைத்தொழில் பாடசாலை ஒன்றை நிறுவ முயற்சிகளை மேற்கொண்ட போது, உள்ளூர் பொதுமக்கள், மற்றும் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், அவ்விடத்தை [[வயாவிளான் மத்திய கல்லூரி]]யின் பயன்பாட்டுக்காகக் கையளித்து பெருமளவு நன்கொடையும் அளித்தார். குரும்பசிட்டியில் சன்மார்க்க சபை என்னும் பெயரில் ஒரு சங்கத்தை 1934 ஆம் ஆண்டில் நிறுவினார்.<ref name="Eelakesari010451"/>
 
1950 ஆம் ஆண்டில் அரசாங்கம் இவரை சமாதான நீதிபதியாக்கிக் கௌரவித்தது.<ref name="Eelakesari010451"/>
"https://ta.wikipedia.org/wiki/நா._பொன்னையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது