தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
[http://www.seu.ac.lk/fe/ பொறியியல் பீடம்] .|website=[http://www.seu.ac.lk/index.htm தென்கிழக்குப் பல்கலை]}}

'''இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்''' [[அம்பாறை]] [[ஒலுவில்|ஒலுவிலில்]] அமைந்துள்ளது. இது இலங்கையின் பத்தாவது தேசிய (அரச) பல்கலைக்கழகமாகும். இது அம்பாறையின் கரையோர மாவட்டமான ஒலுவிலில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர், முஸ்லிம் காங்கிரசின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான [[எம். எச். எம். அஷ்ரப்]] ஆவார். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் [[1978]] ஆம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24ம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக [[1995]] ஆம் ஆண்டு [[ஜூலை 26]] ஆம் நாள் நிறுவப்பட்டது. பின்னர் அது 1995ம் ஆண்டு [[மே 15]] ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டது.

2004ம் ஆண்டு தொடக்கம் வெளிவாரியாகவும் மாணவர்களுக்கு பட்டப்பாடநெறிகளை ஆரம்பித்தது.

வரிசை 20:
'''அறிமுகம்'''

'''உ'''லகின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவரான Longfellow என்பவரால் எழுதப்பட்ட ‘அறிவுஞானம்’ எனும் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மேற்கோளுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கப்படுகின்றது. அம்மேற்கோள் ‘சிறந்த மனிதர்களின் வாழ்க்கையை நாம் நினைவூட்டுவது நாம் எமது வாழ்வில் உயர்ந்து நிற்க வழிவகுக்கும்’ என்பதாகும். இந்த உணர்ச்சி பூர்வமான கருத்தை அஷ்ரஃபில் எம்மால் பார்க்க முடிகின்றது. இதன்படி இக்கட்டுரை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றை மிகச் சுருக்கமாக ஆராய்வதுடன் இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு குறித்த மறுவாசிப்பாகவும் அமைகின்றது.

'''முஸ்லிம் கல்வி'''

கடந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர். 1902இல் இலங்கையில் கல்வி கற்ற முஸ்லிம்களாக வெறும் 119 பேர் மட்டுமே இருந்தனர். பேராசிரியர் விஷ்வ வர்ணபால குறிப்பிடுவதன்படி 1920களில் முஸ்லிம்கள் மத்தியில் செயற்பட்ட சிறந்ததொரு கல்வியியலாளராக டி.பி. ஜாயா விளங்கினார். அவர் அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களின் போது முஸ்லிம்களின் நலன்களுக்காக வாதாடியதுடன் நாட்டின் கல்விக் கொள்கைகளுக்குப் பங்களிப்புச் செய்து இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கான பாதையில் முஸ்லிம்களையும் பங்குதாரர்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருந்தார்.

டி.பி.ஜாயா அவர்களின் முயற்சியால் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் அதிபராகவும் அவர் பணியாற்றினார். ஆரம்பத்தில் இப்பாடசாலை வெறுமனே 6 ஆசிரியர்கள், 59 மாணவர்களுடன் இயங்கத் தொடங்கியது. அப்போது இப்பாடசாலையில் கல்வி கற்பதற்கு பொருத்தமான சூழல் காணப்படவில்லை. பற்றைகள் நிறைந்த காடு போல இவ்வளாகம் தென்பட்டதுடன் தளபாடப் பற்றாக்குறை, போதிய கட்டிடங்கள் இன்மை, தங்குமிட வசதி மற்றும் சமூக விரோத செயல்கள் என்பனவும் மலிந்து காணப்பட்டன. இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படையிலான கல்வி முறையை ஏற்படுத்த ஜாயா மிகவும் பாடுபட்டார். இவ்வாறான கல்வியூட்டலே முஸ்லிம்கள் மத்தியில் அரசியல், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் கருதினார். எனினும் இவரது காலத்தில் (1921-1948) குறைந்தளவிலேயே கல்வி மறுமலர்ச்சி ஏற்பட்டது.