பூலோக ரம்பை (1940 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
புவனேந்திரனும், புத்திசிகாமணியும் பாதாள அரண்மனைக்குச் செல்லும் இரகசியக் குளக்கரைக்குத் தற்செயலாக வருகிறார்கள். புவனேந்திரன் தனக்கு உணவு தேடித் தரும்படி சிகாமணியை அனுப்பி விட்டு குளக்கரையில் இளைப்பாறுகிறான். அப்போது அங்கு வந்த நாகாசுரன் புபனேந்திரனை சண்டைக்கிழுத்து, அவனது மந்திர வாலால் மடிகிறான். நாகாசுரனின் மோதிரத்தின் சக்தியால் புவனேந்திரனுக்கு குளத்து நீர் வழி விடுகிறது. புவனேந்திரனும் பாதாள அரண்மனைக்குள் சென்று பூலோக ரம்பையை சந்தித்து அவளைக் காந்தர்வ மணம் புரிகிறான்.<ref name="sb"/>
 
இதற்கிடையில், உணவு பெற்றுவரக் கிளம்பிய புத்திசிகாமணியுடன் அந்நகரச் சிப்பாய்கள் சண்டையிட்டுக் காயப்படுத்துகிறார்கள். அவனை ''சகுலனும்'' ([[டி. எஸ். துரைராஜ்]]) அவனது சகோதரி ''அலங்காரமும்'' (பாபுஜி) காப்பாற்றி நகரின் வெளிப்புறத்தில் மல்லிகாவின் ([[குமாரி ருக்மணி]]) வீட்டிற்குக் கொண்டு போகிறார்கள். அங்கு அவனுக்கு மல்லிகா சிகிச்சை அளிக்கிறாள். மறுநாள் குளக்கரைக்கு வந்தபோது புவனேந்திரனைக் காணவில்லை. பாதாள அரண்மனையில் பூலோக ரம்பையுடன் சல்லாபித்திருந்த புவனேந்திரன் அவளுடன் சதுரங்கம் ஆடும்போது , மந்திரியின் நினைவு வந்து, அவளுடன் பூலோகம் வருகிறான். அப்போது வேட்டையாட வந்த விஜயநகர மன்னன் ''விஜயதரனும்'' ([[டி. எஸ். பாலையா]]) அவனது மந்திரி ''துர்முகனும்'' (எம். ஆர். சுவாமிநாதன்) பூலோக ரம்பையைப் பார்த்து, அவளை அடைய நினைக்கிறான். துர்முகன் ''வெங்கம்மாள்'' என்பவளை அனுப்புகிறான். அவள் மேல் இரக்கம் கொண்ட புவனேந்திரன் அவளை பாதாள அரண்மனைக்கு சமையல்காரி ஆக்குகிறான். அவள் ஒருநாள் புவனேந்திரனுக்கு நஞ்சும், ரம்பைக்கு மயக்கமருந்தும் கொடுத்து, அவனது மந்திர மோதிரத்தையும் கழற்றிக் கொண்டு ரம்பைஅயி தூக்கிக் கொண்டு போய் விஜயதரனிடம் சேர்ப்பிக்கிறாள்.<ref name="sb"/> (''இன்னும் வரும்'''')
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பூலோக_ரம்பை_(1940_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது