புல்லாங்குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி image link add/remove
வரிசை 1:
[[படிமம்:pullaanguzhalShinobue and other flutes.jpg|thumb||புல்லாங்குழல்]]
'''புல்லாங்குழல்''' ({{audio|Mozart - Concerto in D for Flute K.314.ladybyron.ogg|புல்லாங்குழல் இசைக்கோப்பு}}) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு [[இசைக்கருவி]]. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (''aero phones'') வகையைச் சேர்ந்தது.
 
== இலக்கியத்தில் புல்லாங்குழல் ==
[[இந்தியா]]வின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. [[தமிழ்|தமிழின்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்]]களும் குழல் பற்றிப்பேசுகின்றன. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. [[இந்து சமயம்|இந்து]]க்களின் கடவுளான [[விஷ்ணு]] பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.
வரி 15 ⟶ 16:
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலில் சொல்லுகின்றார். முருகப்பெருமான் [[குறிஞ்சி]] நிலக் கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழ்கின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற [[மூங்கில்|மூங்கிலை]] வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம் சுப்பிரமணிய சுவாமி.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்கம்: 78</ref>
 
== வகைகள் ==
 
=== இந்திய புல்லாங்குழல் ===
===இந்திய புல்லாங்குழல்===
 
இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றது.இந்தியர்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறது.மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று '''பன்சூரி''' வகையாகும்.இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.மற்றொருவகை '''வேணு''' இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் ஆகும்.
 
=== சீனப் புல்லாங்குழல் ===
 
சீனப் புல்லாங்குழல்கள் டிசி என அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு அளவுகளிலும், பல்வேறு அமைப்புக்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் துளைகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 11 வரை வேறுபடுகின்றன. பெரும்பாலானவை மூங்கிலால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மரம், எலும்பு, இரும்பு ஆகியவற்றாலும் ஆக்கப்பட்டவையும் காணப்படுகின்றன.
வரி 27 ⟶ 28:
நவீன சீன இசைநிகழ்ச்சிகளில் காணப்படக்கூடிய புல்லாங்குழல்களாவன பங்டி (梆笛), கூடி (曲笛), சிந்தி (新笛), டாடி (大笛) என்பனவாகும். நிலைக்குத்தாக வைத்து வாசிக்கப்படும் மூங்கிலாலான புல்லாங்குழல் சியாவோ (簫) என அழைக்கப்படுகின்றது.
 
=== ஜப்பானியப் புல்லாங்குழல் ===
 
ஜப்பானியப் புல்லாங்குழல்கள் [[ஜப்பானிய மொழி|ஜப்பானிய மொழியில்]]யில் பியூ (fue) (笛) ([[ஹிரகனா எழுத்துக்கள்|ஹிரகனா]] ふえ) என அழைக்கப்படுகின்றன. முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படுபவை, குறுக்க்காக வைத்து வாசிக்கப் படுபவை என இரு வகையிலும் பல சங்கீதப் புல்லாங்குழல்கள் [[ஜப்பான்|ஜப்பானில்]] காணப்படுகின்றன.
 
=== சோடினா மற்றும் சுலிங் ===
 
'''சோடினா''' எனப்படுவது முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படும் ஒருவகைப் புல்லாங்குழல் ஆகும். இது [[இந்து சமுத்திரம்|இந்து சமுத்திரத்தில்]] உள்ள தென்கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த [[மடகஸ்கார்]] தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசியாவிலும்]]விலும் [[இந்தோனேசியா|இந்தோனேசியாவிலும்]]விலும் இது '''சுலிங்''' என அழைக்கப்படுகின்றது. சமகாலத்தில் வசித்த பிரசித்தி பெற்ற சோடினா வாசிப்பவரான இரகோடோ பிராவின் (இறப்பு2001) புகைப்படம் அந்நாட்டுப் பணத்தாள் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது.
 
== அமைப்பு ==
வரி 41 ⟶ 42:
 
== வாசிக்கும் முறை ==
[[Fileபடிமம்:Playing flute.JPG|thumb|புல்லாங்குழல் இசைத்தல்]]
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது [[இசை]] பிறக்கின்றது.
 
வரி 57 ⟶ 58:
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளியிணைப்புகள் ==
{{commonscatCommons category|Flutes}}
* [http://www.thehindu.com/chennai-margazhi-season/why-are-flautists-being-shortchanged-when-it-comes-to-solo-concert-opportunities/article6716217.ece?ref=sliderNews ''They're heard… but faintly'']
* [http://www.thehindu.com/features/friday-review/bamboo-to-bansuri/article7970395.ece ''Bamboo to bansuri'' - புல்லாங்குழல் தயாரிக்கும் முறை]
வரி 66 ⟶ 68:
* [[பஞ்சமரபு]]
 
{{commonscat|Flutes}}
{{தமிழிசைக் கருவிகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/புல்லாங்குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது