"ஆத்ம ஞானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
தங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் [[பிரம்மம்|இறைவனே]].
 
வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த [[குரு]]வின் வழியாக கேட்பது [[சிரவணம்]], கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல் [[மனனம் (இந்து சமயம்)|மனனம்]], (கேட்டதை மனதில் அசைபோடுதல்), ([[நிதித்யாசனம்]]), வேதம், குரு, சாத்திரங்கள், யுக்தி, அனுபவம் முதலிய சாதனங்கள் வழியாக மட்டுமே ஆத்ம ஞானம் எனும் [[பிரம்மம்|பிரம்ம ஞானத்தை]] அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மாவை விசாரனை செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமயமான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.
 
இது போன்ற அனாத்மா ([[ஆத்மா|ஆத்மாவின் எதிர்மறை பொருள்]]) பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் [[ஆத்மா]] அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், நீர், காற்று, நெருப்பு, சப்தம், சுவை, தொடு உணர்வு, முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் (இயற்கை) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, [[ஆத்மா]] ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2144591" இருந்து மீள்விக்கப்பட்டது