கலியுககாலம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: """அர்ஜுனா""" என்ற தமிழ் இயக்குனரால் இயக்கித் தயாரிக்கப்பட்ட "கலியுக கால...
(வேறுபாடு ஏதுமில்லை)

14:30, 21 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்

"""அர்ஜுனா""" என்ற தமிழ் இயக்குனரால் இயக்கித் தயாரிக்கப்பட்ட "கலியுக காலே" என்ற சிங்களத்திரைப்படம் சமகாலத்தில், "கலியுக காலம்" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

சிங்கள நடிகர்களான டோனி ரணசிங்க, றீடா பெர்னாண்டோ பிரதான பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தின் தமிழ் வசனங்களை கே. எம். வாசகர் எழுதினார்.

ஜோக்கிம் பெர்னாண்டோ, விஜயாள் பீற்றர், சுப்புலட்சுமி காசிநாதன், ரி.ராஜகோபால், கே. எஸ். பாலச்சந்திரன், எஸ். ராம்தாஸ் முதலிய பிரபல வானொலிக்கலைஞர்கள் குரல் கொடுத்தார்கள்.

தமிழ்த்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர், தற்போது டென்மார்க்கில் வாழும் சண் என்ற இசையமைப்பாளராவார்.


குறிப்பு

  • "சுஜாதா அத்தனாயக்க" பாடி, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற " அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள்" என்ற பாடல் அக்காலத்தில் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான பிரபலமான பாடலாகும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலியுககாலம்_(திரைப்படம்)&oldid=214461" இலிருந்து மீள்விக்கப்பட்டது