காரைக்கால் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி) ஒன்றியப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களான (1) [[புதுச்சேரி]] (2) [[காரைக்கால்]] (3)[[மாஹே]] (4) [[ஏனாம்]] ஆகிய நான்கு பகுதிகளில் பரப்பிலும் மக்கள் தொகையிலும் காரைக்கால் மாவட்டம் இரண்டாவது இடத்தில் அமைகிறது. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம்மாவட்டம் 161 ச.கிமீ பரப்பளவு உடையது. காரைக்கால் மாவட்டமானது [[காரைக்கால்]], [[திருமலைராஜன்பட்டினம்]], [[திருநள்ளாறு]], [[அம்பகரத்தூர்]][[நெடுங்காடு]], [[கோட்டுச்சேரி]], [[நிரவி]] ஆகிய ஊர்களை உள்ளடக்கியது.
 
இது காவிரி கழிமுகத்தில் அமைந்துள்ளது.[[அரசலாறு]], [[உப்பனாறு]], [[முல்லையாறு]], [[திருமலைராயன் ஆறு]] ஆகிய ஆறுகள் காரைக்கால் மாவட்டத்தில் ஓடுகின்றன. மேற்கு எல்லையாக [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டமும்]], வட தென் எல்லையாக [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டமும்]] கிழக்கு எல்லையாக [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவும்]] உள்ளது. இதை நாகப்பட்டிண மாவட்டத்துக்கு இடையில் உள்ள பகுதி என்று சொல்வதும் பொருந்தும். [[திருநள்ளாறு]] என்ற இந்துக்களின் புகழ் பெற்ற ஊர் இங்கு உள்ளது. காரைக்கால் நகரில் புகழ் பெற்ற [[காரைக்கால் அம்மையார் கோயில்]] உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது