மரவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 62:
|accessdate=4 January 2015}}</ref>
}}
[[படிமம்:Casava.jpg|upright|thumb|மரவள்ளிச் செடி]]
'''மரவள்ளி''' (''Manihot esculenta'', ''manioc'', ''cassava''; உள்நாட்டுப் பெயர்கள்: ''குச்சிக் கிழங்கு'', ''குச்சிவள்ளிக் கிழங்கு'', ''மரச்சினி கிழங்கு'') என்பது ''இயுபோபியேசியே'' தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் [[செடி]]. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று [[ஆப்பிரிக்கா]]வில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான [[நைஜீரியா|நைசீரியா]]வே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய [[கிழங்கு]] பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான [[கார்போவைதரேட்டு]]க்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.<ref>Phillips, T. P. (1983). [http://idl-bnc.idrc.ca/dspace/handle/123456789/18158 An overview of cassava consumption and production.] In Cassava Toxicity and Thyroid; Proceedings of a Workshop, Ottawa, 1982 (International Development Research Centre Monograph 207e). pp. 83–88 [F. Delange and R. Ahluwalia. editors]. Ottawa. Canada: International Development Research Centre.</ref><ref>Claude Fauquet and Denis Fargette, (1990) "African Cassava Mosaic Virus: Etiology, Epidemiology, and Control" ''Plant Disease'' Vol. 74(6): 404–11. [http://www.apsnet.org/pd/PDFS/1990/PlantDisease74n06_404.pdf]</ref>
 
மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது. மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் [[சயனோசெனிக் குளுக்கோசைட்டு]] எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது. இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி [[கோன்சோ]] என்னும் நோயை உருவாக்கக்கூடும். "கசப்பு" மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் "கசப்பு" மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.<ref name="leisa">Linley Chiwona-Karltun, Chrissie Katundu, James Ngoma, Felistus Chipungu, Jonathan Mkumbira, Sidney Simukoko, Janice Jiggins (2002) ''Bitter cassava and women: an intriguing response to food security'' LEISA Magazine, volume 18 Issue 4. [http://www.leisa.info/index.php?url=article-details.tpl&p%5B_id%5D=12621 Online version] accessed on 2009-08-11.</ref>
 
== வரலாறு ==
[[படிமம்:Casava.jpg|upright|thumb|மரவள்ளிச் செடி]]
தற்காலத்தில் உணவுக்காகப் பயிரிடப்படும் மரவள்ளி, ''ம. எசுக்கியூலெண்டா'' தாவர இனத்தின் துணை இனமான ''பிளபெலிபோலியா'' என்னும் காட்டு மரவள்ளி இனத்திலிருந்தே உருவானதாகக் கருதப்படுகின்றது. இக் காட்டுவகையின் வீட்டுப் பயிராக்கம் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தொடங்கியது. கிமு 6,600 காலப் பகுதியைச் சேர்ந்த, [[மெக்சிக்கோ குடா]]வின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள [[சான் ஆண்ட்ரெசு]] தொல்லியல் களத்தில் மரவள்ளி மகரந்தப்பொடி காணப்பட்டது. எல் சல்வடோர் நாட்டில் உள்ள 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட [[மாயன் நாகரிகம்|மாயன்]] காலத்துத் தொல்லியல் களமான [[ஜோயா டி செரன்|ஜோயா டி செரனில்]] மரவள்ளிப் பயிர்செய்கை குறித்த நேரடியான சான்றுகள் கிடைத்துள்ளன. தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதி, நடு அமெரிக்காவின் தெற்குப் பகுதி, கரிபியப் பகுதி ஆகியவற்றை எசுப்பானியர்கள் ஆக்கிரமித்த காலத்துக்கு முன்பே, மரவள்ளி, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக ஆகிவிட்டது. போத்துக்கேய, எசுப்பானியக் குடியேற்றவாதக் காலங்களிலும், இப் பகுதியில் மரவள்ளிச் செய்கை தொடர்ந்து நடைபெற்றது. கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம்பெற்றது. மோச்சே மக்கள் தமது மட்பாண்டங்களில் மரவள்ளியை வரைந்தனர்.
 
வரி 87 ⟶ 88:
 
== பொருளாதார அம்சங்கள் ==
[[படிமம்:Maniic-cultivation-Jaffna.JPG|thumb|250px|யாழ்ப்பாணப் பகுதியில் மரவள்ளிப் பயிர்ச் செய்கை]]
2002 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி, உலகில் மரவள்ளிக் கிழங்கின் உற்பத்தி 184 மில்லியன் தொன்கள் ஆகும். இவற்றில் ஆப்பிரிக்காவில் 99.1 மில்லியன் தொன்களும், ஆசியாவில் 51.5 மில்லியன் தொன்களும், இலத்தீன் அமெரிக்காவிலும் கரிபியன் பகுதிகளிலும் 33.2 மில்லியன் தொன்களும் உற்பத்தியாகின. உலகில் மிக அதிக அளவான மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடு நைசீரியா எனினும், உலக உணவு அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, கூடிய அளவு மரவள்ளியை ஏற்றுமதி செய்யும் நாடு [[தாய்லாந்து]] ஆகும். 2005 ஆம் ஆண்டில் உலக மொத்த ஏற்றுமதியின் 77% தாய்லாந்திலிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து [[வியட்நாம்]] 13.6% ஐயும், [[இந்தோனீசியா]] 5.8% ஐயும், [[கொசுத்தாரிக்கா]] 2.1% ஐயும் ஏற்றுமதி செய்தன. 1988 க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் மரவள்ளி உற்பத்தி 12.5% கூடியுள்ளது.
 
வரிசை 99:
 
== மரவள்ளிக் கிழங்கு சார்ந்த வேளாண் தொழில்கள் ==
[[படிமம்:Maniic-cultivation-Jaffna.JPG|thumb|250px|யாழ்ப்பாணப் பகுதியில் மரவள்ளிப் பயிர்ச் செய்கை]]
இது ஒரு உணவுப் பொருள். பல்வேறு தொழில்சாலைகளின் ஒரு மூலப் பொருளாகவும் குறிப்பாக நொதித்தல் சார்ந்த தொழிற்சாலைகளில் முக்கிய பொருளாகவும் பயன்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இது முக்கிய பணப் பயிராகும். தென்னிந்திய மாநிலங்களான [[தமிழ்நாடு]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[கேரளா]] ஆகியவற்றிலும், [[இலங்கை]]யிலும் குறிப்பிடத்தக்க அளவில் மரவள்ளி பயிர் செய்யப்படுகின்றது.உலக மொத்த கிழங்கு உற்பத்தி செய்யும் நான்கு நாடுகளில் (158 மில்லியன் டன்) ஆசியா நான்காவது இடத்தில் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/மரவள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது