மரவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 176:
 
== பொருளாதார அம்சங்கள் ==
[[படிமம்:Harvesting-manioc-Jaffna.JPG|thumb|250px|யாழ்ப்பாணத்தில் மரவள்ளிச் செடிகளைப் பிடுங்கிக் கிழங்கு எடுக்கும் காட்சி]]
2002 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படிமதிப்பீட்டின்படி, உலகில் மரவள்ளிக் கிழங்கின் உற்பத்தி 184 மில்லியன் தொன்கள் ஆகும். இவற்றில் ஆப்பிரிக்காவில் 99.1 மில்லியன் தொன்களும், ஆசியாவில் 51.5 மில்லியன் தொன்களும், இலத்தீன் அமெரிக்காவிலும் கரிபியன் பகுதிகளிலும் 33.2 மில்லியன் தொன்களும் உற்பத்தியாகின. உலகில் மிக அதிக அளவான மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடு நைசீரியா எனினும், உலக உணவு அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, கூடிய அளவு மரவள்ளியை ஏற்றுமதி செய்யும் நாடு [[தாய்லாந்து]] ஆகும். 2005 ஆம் ஆண்டில் உலக மொத்த ஏற்றுமதியின் 77% தாய்லாந்திலிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து [[வியட்நாம்]] 13.6% ஐயும், [[இந்தோனீசியா]] 5.8% ஐயும், [[கொசுத்தாரிக்கா]] 2.1% ஐயும் ஏற்றுமதி செய்தன. 1988 க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் மரவள்ளி உற்பத்தி 12.5% கூடியுள்ளது.
 
பயிர்த் தாவரங்களில் கரும்புக்கு அடுத்தபடியாக, ஒரு நாளுக்கு, ஓரலகு பயிர்ச் செய்கைப் பரப்பில் மிகக்கூடிய உணவு ஆற்றலை வழங்குவது மரவள்ளியாகும். வளம் குறைந்த மண்ணிலும், குறைந்த [[மழை வீழ்ச்சி]] கொண்ட இடங்களிலும் சிறப்பாக வளர்வதால், கீழ் சகாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள நாடுகள் போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் [[வேளாண்மை]]யில் மரவள்ளி முக்கிய இடத்தை வகிக்கின்றது. இது ஒரு பல்லாண்டுத் தாவரம் என்பதால், இதனை வேண்டியபோது அறுவடை செய்துகொள்ள முடியும். இது, மரவள்ளியை பஞ்சகாலத்துக்காக ஒதுக்கி வைக்க உதவுவதுடன், அறுவடைக் கூலியாட்கள் மேலாண்மை தொடர்பிலும் பயனுள்ளதாக அமைகின்றது. இதனைப் பணப் பயிராகவோ, வாழ்வாதாரப் பயிராகவோ பயிரிட முடிவதால், குறைந்த வளங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு இது ஒரு நெகிழ்வுத் தன்மையையும் வழங்குகிறது.
 
[[படிமம்:Harvesting-manioc-Jaffna.JPG|thumb|250px|யாழ்ப்பாணத்தில் மரவள்ளிச் செடிகளைப் பிடுங்கிக் கிழங்கு எடுக்கும் காட்சி]]
ஆப்பிரிக்கக் கண்டத்து மக்களைப்போல் வேறெந்தக் கண்டத்து மக்களும் அதிகமாகக் கிழங்கு வகைகளில் தங்கியிருப்பதில்லை எனலாம். வெப்பவலய ஆப்பிரிக்காவில், மரவள்ளி முக்கிய உணவாக அல்லது முக்கியமான துணை உணவாகப் பயன்படுகின்றது. கானாவில், வேளாண்மைத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46% மரவள்ளியிலிருந்தும் பிற கிழங்கு வகைகளிலிருந்துமே கிடைக்கின்றது. கானாவில், நாளுக்குரிய கலோரி உள்ளெடுப்பின் 30% மரவள்ளிக் கிழங்கு மூலமே பெறப்படுவதுடன், ஏறத்தாழ எல்லா வேளாண் குடும்பங்களுமே மரவள்ளியைப் பயிர் செய்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/மரவள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது