இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==பிறப்பும் படிப்பும்==
 
இன்குலாப்பின் இயற்பெயர் எஸ். கே. எஸ். சாகுல் அமீது. [[கீழக்கரை]] என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியக் குமுகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த நாவிதக் குடியில்குடும்பத்தில்  பிறந்தார். இவருடைய தந்தை [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவர்]]. பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு [[சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி]]யில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் [[மீரா]] என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.
 
[[மதுரைத் தியாகராசர் கல்லூரி]]யில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து [[சென்னை]]யில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். [[ஈரோடு தமிழன்பன்]], நா.பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது