"சரஸ்வதி தமிழ்ப்பள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (clean up)
| established = 1923
}}
'''சரஸ்வதி தமிழ்ப்பள்ளி''' [[மலேசியா]] [[கெடா]] [[சுங்கை பட்டாணி]] நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி.<ref>[http://ppdkmy.moe.gov.my/index.php/module-styles/jenis-kebangsaan-tamil Sjk(T) Saraswathy,Taman Tiong, 08000 Sungai Petani, Kedah.]</ref> கெடா மாநிலத்தில் வாழும் மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற இப்பள்ளி<ref>[http://www.thaimoli.com/news-detail.php?nwsId=15809 சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாநில அளவில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாகும்.]</ref> 2014ஆம் ஆண்டு தன் 90ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. தவிர சுங்கை பட்டாணி நகரில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி எனும் பெருமையும் இப்பள்ளிக்கு உள்ளது.
 
எண்ணற்றக் கல்விமான்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், விரிவுரையாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், கணினித் துறை விற்பனர்கள், இசைஞர்கள் என பல் துறையினரை உருவாக்கித் தந்த பெருமையும் இப்பள்ளிக்கு அணி சேர்க்கின்றது.<ref>[http://drkloganathan.blogspot.my/2015/02/dr-k.html Dr K.Loganathan, also known as Dr K. Loganathan Mutharayan or simply Ulagan, is a well known scholar in a wide range of fields.]</ref><ref>[http://www.kosmo.com.my/kosmo/content.asp?y=2013&dt=0822&pub=Kosmo&sec=Rencana_Utama&pg=ru_01.htm/ Bala Ganapathi William is an Indian actor, anchor and producer in Malaysian Indian Cinema.]</ref>
 
சாதாரண பலகைக் கொட்டகையில் 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, பல்வகையான உருமாற்றங்களைப் பெற்று இப்போது சுங்கை பட்டாணி வட்டாரத்தில் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. அன்றையக் காலக் கட்டத்தில் இன உணர்வோடும் மொழி உணர்வோடும் தொடங்கப்பட்ட சரஸ்வதி தமிழ்ப்பள்ளி படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று ஆல விருச்சகமாய் தோற்றம் அளிக்கின்றது.<ref>[http://mytamilchannel.com.my/1191-students-from-tamil-schools-scored-7as/ SJKT Saraswathy - 12 students with 7As]</ref>
 
=== ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானம் ===
[[1923]] ஆம் ஆண்டு சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தினர் முழு முயற்சி எடுத்துக் கொண்டனர். ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் வளாகத்திலேயே பள்ளியை உருவாக்கினார்கள். ஒரே ஓர் ஆசிரியரின் மேற்பார்வையில் 25 மாணவர்களுடன் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கியது. அந்த ஆசிரியரின் பெயர் சுவாமி நாயக்கர்.
 
தொடக்கக் காலத்தில் ஆலயச் செயலவையினரின் ஒத்துழைப்புடன் பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளிக்குத் தேவையான தளவாடச் செலவுகள், ஆசிரியரின் சம்பளம், இதர செலவுகள் போன்றவற்றிற்கு ஆலய நிர்வாகத்தினரே பொறுப்பேற்றுக் கொண்டனர்.
 
===அஞ்சல் நிலையத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி ===
[[1941]] ஆம் ஆண்டு இப்பள்ளி கம்போங் அனாசினா பகுதிக்கு இடம் மாறியது. மலாய் மொழியில் கம்போங் என்றால் கிராமம். கம்போங் அனாசினாவின் பழைய பெயர் ''பெக்கான் அத்தாப்.'' பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்தது. அப்போதைக்கு மாணவர் எண்ணிக்கை 48 ஆகும். அதன் பின்னர் பதினொரு ஆண்டுகளுக்கு, அதாவது [[1952]] ஆம் ஆண்டு வரை அதே இடத்தில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வந்தது.
 
ஒரு சமயத்தில் பயங்கரமான ஒரு புயல்காற்று சுங்கை பட்டாணி நகரத்தையே தாக்கிக் குலுக்கியது. அதில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி பெரிதும் பாதிக்கப்பட்டு முற்றாகச் சேதமும் அடைந்தது. பள்ளியைப் பயன்படுத்த முடியாத ஓர் அவல நிலையும் ஏற்பட்டது. அதனால், வேறுவழியின்றித் தற்காலிகமாக பழைய அஞ்சல் நிலையத்திற்கு மாற்றம் கண்டது. பின்னர் ஓராண்டு காலத்திற்கு கிர் ஜொகாரி தேசியப் பள்ளியில் அடைக்கலம். அப்போது சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்கள் அறுவர்; மாணவர்கள் 120 பேர்.
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி இப்படி அடிக்கடி இடம் மாற்றம் கண்டு வந்தது சுங்கை பட்டாணி வாழ் தமிழர்களுக்கு மன உறுத்தலைக் கொடுத்தது. அதனால் ஒரு நிரந்தரமான இடத்தைத் தேடினர். சரியான இடம் கிடைக்கவில்லை. [[1954]] இல் பள்ளியை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான ஆலய வளாகத்திலேயே நடத்துவது என ஆலய நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
 
[[1957]] ஆம் ஆண்டு, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஐந்து ஏக்கர் நிலத்தை சுங்கை பட்டாணி ஜாலான் தியோங் எனும் இடத்தில் வாங்கியது. அந்த நிலத்தில் புதியப் பள்ளியைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளிக் கட்டட நிர்மாணிப்பிற்காக அரசாங்கம் 15,000 [[ரிங்கிட்]] நிதியுதவி வழங்கியது. அந்தப் புதிய கட்டடத்திற்கு அப்போதைய மலேசியப் பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்]] அடிக்கல் நாட்டினார்.
 
பொதுமக்களின் நன்கொடைகளினாலும், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் பொருளுதவிகளினாலும் [[1960]] ஆம் ஆண்டு புதிய பள்ளிக்கூடக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதே இந்த இடத்தில் தான் இப்போதைக்கு சரஸ்வதி தமிழ்ப்பள்ளியும் கம்பீரமாய்க் காட்சி அளிக்கின்றது. [[சஞ்சிக்கூலி]]களாய் மலாயாவுக்கு வந்த தமிழர்களின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமும் தொடங்கியது.
[[1970]] தொடங்கி பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் பள்ளியில் வகுப்பறைப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காணும் வகையில் [[1983]] ஆம் ஆண்டு தொடங்கி இப்பள்ளியில் காலைப்பகுதி, மாலைப்பகுதி என இருநேரப்பகுதிகள் அமல்படுத்தப் பட்டன. இருநேரப் பள்ளி முறையில் நான்கு, ஐந்து, ஆறாம் வகுப்பு மாணவர்கள் காலை நேரப் பள்ளியில் கல்வி பயின்றனர். ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் மாலை நேரப்பள்ளியில் கல்வி பயின்றனர்.
 
இருநேரப்பள்ளி முறை அமல் செய்யப்பட்டாலும் பள்ளியின் நிர்வாகம் முழுமையாக ஒரே அணியின் கீழ் இயங்கி வந்தது. பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் முறையாகக் கண்காணித்துச் செயலாற்றி வந்தது.
 
[[1978]] ஆம் ஆண்டு முதல் [[1982]] ஆம் ஆண்டு வரை இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர் நா. திருப்பதி. இவர் இந்தப் பள்ளிக்கு ஒரு திடலை உருவாக்கித் தருவதில் பெரும் பங்காற்றினார். அவரின் கடும் முயற்சிகளினால் மேடும் பள்ளமுமாய் குண்டும் குழியுமாய் இருந்த பொட்டல் நிலம் சீர் செய்யப்பட்டது. ஒரு புதிய மைதானமும் உருவானது. அன்று முதல் வகுப்புகளின் உடற்பயிற்சி நடவடிக்கைகளும், பள்ளியின் ஆண்டு போட்டி விளையாட்டுகளும் இந்த மைதானத்தில் போதிய வசதிகளுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
== சாதனைகள் ==
=== உலகப் பெலி நடனச் சாதனையாளர் விருது ===
சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் சிறப்பிற்கு உலகப் பெலி நடனச் சாதனையாளர் விருது மேலும் ஒரு சிகரமாக அமைந்தது. ஹர்ஷினி த/பெ ரமேஸ் எனும் மாணவிக்கு 2014 ஆம் ஆண்டின் உலகப் பெலி நடனச் சாதனையாளர் விருது கிடைத்தது.<ref>[https://www.youtube.com/watch?v=X0g5zRN_Ynw/ WBDF Competition 2014 Children's Oriental Solo, Champion - Harshiniy Ramesh]]</ref> அவர் அப்போது மூன்றாம் ஆண்டு மாணவியாகும். தற்சமயம் ஐந்தாம் ஆண்டு மாணவியாகும்.
 
[[பெட்டாலிங் ஜெயா]]வில் நடைபெற்ற ஆசிய ''பெலி'' (Belly) நடனப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்றார். பின்னர் 2014 மே மாதம் 21ஆம் தேதி [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] நடைபெற்ற உலக ரீதியிலான போட்டியில் 12 வயதினருக்கும் கீழ்ப் பிரிவில் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.<ref>[http://www.worldbellydancecompetition.com/profile-artiste/harshiniy-ramesh/ I choose World Bellydance Festival Competition because belly is graceful and delighting where I get to knew for it too...]]</ref> இவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி பள்ளியும் [[மலேசிய மக்கள் கட்சி]]யும் அவருக்குப் பரிசுகளை வழங்கின.
 
=== அணிவகுப்பு இசைக்குழு ===
[[1986]] ஆம் ஆண்டில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தன்னுடைய சொந்த இசைக்குழுவை அமைத்து மேலும் ஒரு சாதனையைப் படைத்தது. கெடா மாநிலத்தில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்பள்ளியில் அணிவகுப்பு இசைக்குழு அமைக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும்.
 
இசை ஆசிரியர் தவமணி, தலைமையாசிரியராக இருந்த வீரையா அவர்களின் கண்காணிப்பில் இந்த அணிவகுப்பு இசைக்குழு அமைக்கப்பட்டது. முன்னாள் தலைமையாசிரியர்களான தில்லையப்பன், மா. ராஜு அவர்களின் எண்ணங்களில் உருவான இந்த இசைக்குழுத் திட்டம் 1986ஆம் ஆண்டில் நனவானது. ஏறக்குறைய [[மலேசிய ரிங்கிட்]] 20,000 செலவில் தொடங்கப்பட்ட இந்த அணிவகுப்பு இசைக்குழுவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கமும் தன் முழு ஆதரவை வழங்கியது.
== தலைமையாசிரியர்கள் ==
சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் [[1923]] இல் இருந்து பணியாற்றிய தலைமையாசிரியர்களின் விவரங்கள்:
</br />
<center>
{| class="wikitable"
| திரு. எஸ்.கே. கலைச்செல்வன் || 2015 || <sup>*</sup>இன்று வரை
|}</center>
 
</br>
* [[2016]] பிப்ரவரி மாதப் புள்ளி விவரங்கள்
* NA - கிடைக்கவில்லை
== பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் ==
சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் [[1978]] இல் இருந்து பணியாற்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களைப் பற்றிய [[2014]] டிசம்பர் மாத வரையிலான புள்ளி விவரங்கள்:
</br>
 
 
<center>
{| class="wikitable"
! align=center colspan=3 | '''சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் </br />ஆசிரியர் சங்கத் தலைவர்கள்'''
|-
! பெயர் !! தொடக்கம் !! நிறைவு
|}
</center>
</br>
 
== பொது ==
மலேசியக் காலச் சுவடுகளில் [[கடாரம்|கடாரத்து]] மண்ணின் வரலாற்றுச் சிறப்புகள் தனித்து நிற்பவை. தமிழகத்தின் [[இராசேந்திர சோழன்|சோழ மைந்தர்கள்]] கால் பதித்த புனிதமான மண். [[சிறீவிஜயம்|ஸ்ரீ விஜய பேரரசு]] கோலோச்சிய புண்ணியமான மண். அதே அந்த மண்ணில் தான், ஆல விருச்சகமாய் வேரூன்றி நிற்கிறது சரஸ்வதி தமிழ்ப்பள்ளி. பெருமைக்குரிய வரலாற்றையும் பதிவு செய்து வருகிறது.
 
[[மலேசியத் தமிழர்|மலேசியத் தமிழர்கள்]] தன்மானத்தோடு நெஞ்சை உயர்த்தி நடமாடுவதற்கு இந்தப் பள்ளி ஒரு தன்மானச் சின்னமாகவும், [[தமிழ் மக்கள்|தமிழினத்திற்கு]] உயிர் கொடுக்கும் ஒரு கேடயமாகவும், சுங்கை பட்டாணி வாழ் தமிழ் மக்களின் தமிழ் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அழகியத் தமிழ்க் கலசமாகவும் விளங்கி வருகிறது.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2150960" இருந்து மீள்விக்கப்பட்டது