பன்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎வரலாறு: *உரை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 50:
 
==வரலாறு==
இந்நகரத்தின் வரலாறு கி.மு முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குள் அடங்குகின்றது.பன்பூர்ர வலாற்றுபன்பூர் வரலாற்று நகரத்தின் வரலாற்றினை மூன்று வகையான காலப்பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவற்றில் முதலாவது காலப்பகுதியானது சைக்கோ-பார்த்தியன் ஆட்சிக்காலம் ஆகும். இது கி.மு. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை ஆகும். மேலும் இரண்டாம் வரலாற்றுக் காலப்பகுதியானது இந்து-பௌத்தக் காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியானது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் எட்டாம் நூற்றாண்டு வரை ஆகும். பின்னர் இருந்த வரலாற்றுக் காலப்பகுதி புராதன இசுலாமிய வரலாற்றுக் காலப்பகுதி ஆகும். இக்காலப்பகுதியானது கி.பி. 8 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை ஆகும்.
 
ஒருசில தொல்பொருளியல் ஆய்வாளர்களும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இந்நகரத்தினை சிந்துப் பிரதேசத்தினை ஆண்டு வந்த இறுதி இந்து மன்னனான ராஜா தாகிர் அவர்களினை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய அரபு மன்னனான முகம்மது பின் காசிம் என்பவனினால் அவனது ஆட்சியின் போது நிறுவப்பட்ட [[டெபல்]] நகரத்தினுடைய வரலாற்று நகரம் என பன்பூரைக் கருதுகின்றனர். எனினும் கூட இக்கருத்தானது இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை தேடுவதற்க்க பல்வேறு அகழ்வுப் பணிகள் இந்நகர்ப் பகுதியிலே நடைபெற்று வருகின்றன. முதன் முறையாக பன்பூரில் ரமேஷ் சந்திர மயும்தர் என்பவரினாலேயே அகழ்வு மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் 1928 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதன் பின்னர் 1951 ஆம் ஆண்டில் லெஸ்லி அல்கோக் என்பவராலும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 1958 தொடக்கம் 1965 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பாக்கிஸ்தானிய ஆராய்ச்சியாளரான கலாநிதி. ஃப் .அ. கான் அவர்களினால் மிகப் பாரிய அளவில் இந்நகரப் பிரதேசத்தில் வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2012 ஆம் ஆண்டின் மார்ச் மாதமளவில் சிந்து அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சினாலே மாபெரும் மாநாடு ஒன்று பன்பூரில் நடாத்தப்பட்டது. அம்மாநாட்டினில் பல்வேறு தொல்பொருளியல் ஆய்வாளர்களும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொண்டதுடன் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர்.<ref>{{cite news|title=International conference: Experts question if Bhambhore is the historical city of Debal|url=http://tribune.com.pk/story/348776/international-conference-experts-question-if-bhambhore-is-the-historical-city-of-debal/|accessdate=3 September 2012|newspaper=The Express Tribune|date=12 March 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பன்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது