தேசிக விநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
'''கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை''' ([[ஜூலை 27]], [[1876]] - [[செப்டம்பர் 26]], [[1954]]) [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டில்]] [[கன்னியாக்குமரி மாவட்டம்|குமரி மாவட்டத்திலுள்ள]] [[தேரூர்|தேரூரில்]] வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற [[கவிஞர்]]. பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை [[1901]] ல் மணம் முடித்தார். [[நாஞ்சில் நாடு|நாஞ்சில் நாட்டார்]] தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1079596</ref>. <ref>http://www.evi.com/q/facts_about__kavimani_desigavinayagam_pillai</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/தேசிக_விநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது