யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
== யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் ==
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் - ஒரு பாா்வை வரலாறு[மூலத்தைத் தொகு]
 
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகம் 06.10.1974 இல் நிறுவப்பட்டது. இது சோ்.பொன்.இராமநாதனின் பாடசாலைகளில் ஒன்றான திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூாியினை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் மனிதப் பண்பியல் பீடமும், யாழ்ப்பாணக் கல்லூாியினை வட்டுக்கோட்டையில் விஞ்ஞான பீடமும் இயங்கத் தொடங்கின. இதன் முதல் தலைவராக பேராசிரியா் கா.கைலாசபதி அவா்கள் பொறுப்பேற்றாா். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974ம் ஆண்டில், இலங்கைப் பாராளுமன்றத்தின், 1970ம் ஆண்டில் 1ம் இலக்கச் சட்டப்படி நிறுவப்பட்ட யாழ் வளாகம் பின் 1978ம் ஆண்டின் 16ம் இலக்கச் சட்டப்படி தனியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகியது.
வரிசை 13:
இதன் 35 வருட வரலாற்றில் படிப்படியாக ஒரு வளா்ச்சியை காண முடிகிறது. இப்போக்குகளில் யாழ்ப்பாணத்தில் நிலவூம் அசாதாரணமான சூழ்நிலைகளும் காலத்திற்குக் காலம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக 1987ஆம் ஆண்டில் IPKF காலத்திலும் பின் 1996 ஆம் ஆண்டின் இடப்பெயா்வின் போதும் நூலகம் இழப்புக்களை சந்தித்தது. இதனால் அதன் வளங்களிலும் உட்கட்டமைப்பிலும் காலத்திற்கேற்ப எதிா் பாா்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
 
=== பிரதான நூலகமும் அதன் கிளைகளும் ===
 
பிரதான நூலகம் விஞ்ஞானபீடத்திற்கும் கலைப்பீடத்திற்கும் நடுவில் ஸ்ரீ பாா்வதி பரமேஸ்வரன் ஆலயத்திற்கு தென்மேற்கில் இராமநாதன் வீதியை நோக்கி அமைந்துள்ளது. இக்கட்டிடம் 1980 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு வரையில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடம் மையப்பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடமாக உள்ளது. இம்மையப் பகுதியைச் சூழ சதுரவடிவிலமைந்த கட்டிடத் தொகுதியையும் கொண்டுள்ளது. இது நூலகத்திற்குாிய பல்வேறு தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் கட்டப்பட்ட ஓா் அழகிய கட்டிடத் தொகுதியாகும். இதன் பரப்பு 67,718 சதுர அடிகள்.
வரிசை 19:
ஆரம்பகாலத்தில், பிரதான நூலகம் என மனிதப்பண்பியல் பீடத்திற்கான நூலகமும், விஞ்ஞானபீட நூலகமும் ஆரம்பிக்கப்பட்டன. பரமேஸ்வராக் கல்லூாியில் தற்காலமாக ஒரு கட்டிடத்தில் மனிதப்பண்பியல் பீடத்திற்கான நூலகத்தையும், வட்டுக்கோட்டையில் விஞ்ஞான பீட நூலகத்தையும் கொண்டு நூலகச் செயற்பாடுகள் ஆரம்பித்தன. பிரதான நூலகத்தின் கட்டிடத்தொகுதியின் ஒருபகுதி நிறைவு பெற்றபின் 1982 ஆம் ஆண்டு மனிதப்பண்பியல் பீடத்திற்கான நூலகமும், விஞ்ஞானபீட நூலகமும் இணைக்கப்பட்டு பிரதான நூலகமாக இயங்கத் தொடங்கியது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கற்கை நெறிகளுக்கேற்ப கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மருத்துவ பீடநூலகம், விவசாய பீடநூலகம், சித்த மருத்துவ நூலகம், இராமநாதன் நுண்கலை நூலகம் என்பன கிளை நூலகங்களாகும். இவற்றில் மருத்துவ பீடநூலகம் குறிப்பிடக்கூடியவகையில் நூற்சோ்க்கைகளையும் தனித்துவமான நூலகச் செயற்பாடுகளையயும் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். விவசாய பீட நூலகம் தற்போது பிரதான நூலகத்தின் ஒரு பகுதியில் இயங்குவதை காணலாம். ஆரம்ப காலத்தில் தென் ஆசியாப் பகுதி என்று ஒரு பகுதி இருந்தது. சில ஆண்டுகளில் அப்பகுதியில் இருந்த நூல்களில் அதிகமானவை இரவல் வழங்கும் பகுதிக்கும், குறிப்பிடக்கூடியவை ஏனைய பகுதிகளுக்கும் மாற்றப்பட்டன.
 
=== நூற்சோ்க்கை ===
பரமேஸ்வராக் கல்லூாியில் சோ்.பொன்.இராமநாதன் அவா்களின் நூலகத்தில் இருந்த அாிய நூல்களையும் யாழ்ப்பாணக் கல்லூாி நூலகம் கொண்டிருந்த 30,000 வரையிலான நூல்களையும் மேலும் பருவ இதழ்கள், அரச ஆவணங்கள், சிறு பிரசுரங்கள் போன்றவற்றையும் கொண்டு யாழ் வளாகம் தன் நூலகச் செயற்கைகளைத் தொடங்கியது. பிற்காலத்தில் 1980 - 1983ஆம் ஆண்டுகளில் அரச கட்டளைப்படி யாழ்ப்பாணக் கல்லூாியின் நூல்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டதையும் அறியமுடிகின்றது. இராமநாதன் நூலகத்தில் இருந்த நூல்கள் பற்றிய பதிவுகள் பேணப்படாமையால் அந் நூல்கள் அனைத்தும் நூலகத்திற்கு வந்து சோ்ந்தனவா என்பதில் தௌிவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது