பாலைக் கௌதமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறிய மாற்றம்
No edit summary
வரிசை 1:
'''பாலைக் கௌதமனார்''' [[சங்க காலப் புலவர்கள்|சங்ககாலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடியனவாக 11 பாடல்கள் சங்கநூல்களில் காணப்படுகின்றன. [[பதிற்றுப்பத்து]] என்னும் தொகுப்பு நூலில் மூன்றாம் பத்தாக அமைந்துள்ள 10 பாடல்களும், [[புறநானூறு|புறநானூற்றில்]] 366 எண்ணுள்ள பாடலும் இவரால் பாடப்பட்டவை.
 
பாலை என்பது இக்காலத்தில் கேரள மாநிலத்தில் பாலக்காடு என்னும் பெயருடன் விளங்கும் ஊரைக் குறிக்கும். கௌதமன் என்னும் பெயர் வடமொழித் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. புலவரும்புலவர் பொளத்தஅந்தணர். மதத்தவர்<ref>பாடிப் பெற்ற பரிசில்:'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார் (பதிற்றுப்பத்து பதிகம் 3)</ref>. இமயவரம்பன் தம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் மீது இவர் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்தில் உள்ளன. தருமபுத்திரன்மீது இவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.
==== பதிற்றுப்பத்துப் பாடல்கள் ====
இவர் பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியதற்காக அரசன் பரிசளிக்க விரும்பி வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். புலவர் 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகவேண்டும்' என்றார். அரசன் பார்ப்பாரில் பெரியார் யார் எனக் கேட்டறிந்து அவரைக் கொண்டு வேள்வி செய்தான். ஒன்பது வேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்த புலவரும் அவரது பார்ப்பனியும் பத்தாவது வெள்விக்குப்பின் காணாராயினர் என்று அவருடைய பத்துப் பாடல்களுக்கு இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள பதிகம் கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாலைக்_கௌதமனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது