"சரசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== அறிமுகம் ==
'''சரசாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஓர் ஊர் ஆகும். இவ்வூருக்கு வடக்கில் [[கப்பூது]] கிராமமும், கிழக்கில் [[மீசாலை]], [[மந்துவில்]] என்பனவும், தெற்கில் [[மட்டுவில்]] கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த [[வாதரவத்தை]]யும் உள்ளன.<ref>Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.</ref> இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களுக்குள் அடங்கியுள்ளது.[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]]க்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருகு [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்லும் சரசாலை-நுணாவில் வீதி ஊடாக பயணம் செய்யலாம்.
 
== வரலாறு ==
சரசாலை எனும் பெயர் இராமாயண காலத்துடன் தொடர்புபட்டு உருவான ஒரு காரணப்பெயராகும். இராமாயண யுத்த காலத்தில் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்திருந்த இராமபிரனானும் அவரது சேனைகளும் இவ் ஊரிலே போருக்காக பயன்படுத்தப்பட்ட அம்புகளை தயாரித்தார்கள். அம்பு என்பதை சரசு எனவும் அழைக்கலாம். எனவே அம்புகளை உற்பத்தி செய்யும் இடமாக இருந்தமையால் இது சரசு ஆலை என அழைக்கப்பட்டு பின்னர் சரசாலை என அழைக்கப்படுகின்றது.
 
== சிறப்புகள் ==
153

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2156921" இருந்து மீள்விக்கப்பட்டது