"யாக்கூப் ஆஃப்னர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,342 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Haafner.jpg|thumb|யாக்கூப் ஆஃப்னர் 1800]]
'''யாக்கூப் கொட்ஃபிரீட் ஆஃப்னர்''' (Jacob Gottfried Haafner) (13 மே 1754 - 4 செப்டெம்பர் 1809) ஒரு செருமன் - ஒல்லாந்த பயண எழுத்தாளர் ஆவார். இவர் [[தென்னாப்பிரிக்கா]], [[இந்தியா]], [[இலங்கை]] ஆகிய நாடுகளில் தனது பயணங்கள் குறித்து ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் மேற்கத்தியக் குடியேற்றவாதம், மதம் பரப்பும் நிறுவனங்கள், அடிமை முறை அகியவற்றுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர். இவர் நெதர்லாந்துக்குத் திரும்பிய பின்னர் குடியேற்றவாதத்துக்கும், மதம் பரப்பும் நிறுவனங்களுக்கும் எதிரான முதல் நூலை எழுதினார். இவர் [[தமிழ்]] மொழியை நன்கு அறிந்தவர். அத்துடன், [[இந்தி]], [[வங்காளி]] போன்ற மொழிகளிலும், ஓரளவுக்கு [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதத்திலும்]] இவருக்குப் பழக்கம் உண்டு.
 
==இளமைக்காலம்==
யாக்கூப் ஆஃப்னர் 1754ம் ஆண்டு செருமனியில் உள்ள ஆலெ (Halle) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு பிரான்சியர். ஒரு வைத்தியர். தாய் ஒரு செருமானியர். யாக்கூப் பிறந்து சில நாட்களின் பின்னர் தந்தையின் தொழில் காரணமாக அவர்களது குடும்பம் எம்ப்டென் என்னும் இடத்துக்குக் குடி பெயர்ந்தது. 1765ல் அவர்கள் அம்சுடர்டாமில் குடியேறினர். யாக்கூபின் தந்தைக்குத் தொழில் வாய்ப்பு எதிர்பார்த்தபடி அமையாததால், ஒல்லாந்த கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பலில், கப்பல் மருத்துவராகப் பணியேற்றுக் கேப் டவுனுக்குப் பயணமானார். மகன் யாக்கூபையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆனால், கப்பல் கேப் டவுனை எட்டுமுன்பே மூத்த ஆஃப்னர் இறந்துவிட்டார். இவர்களது நண்பர்களான ஒரு குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகள் சிறுவனான யாக்கூபை வளர்த்தனர். அதன் பின்னர் யாக்கூப் தானே உழைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணிய அவர்கள் அவரை சக்கார்த்தா செல்லவிருந்த ஒரு கப்பலில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர்.
 
[[பகுப்பு:பயண எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2157060" இருந்து மீள்விக்கப்பட்டது