யாக்கூப் ஆஃப்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==இளமைக்காலம்==
யாக்கூப் ஆஃப்னர் 1754ம் ஆண்டு செருமனியில் உள்ள ஆலெ (Halle) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு பிரான்சியர். ஒரு வைத்தியர். தாய் ஒரு செருமானியர். யாக்கூப் பிறந்து சில நாட்களின் பின்னர் தந்தையின் தொழில் காரணமாக அவர்களது குடும்பம் எம்ப்டென் என்னும் இடத்துக்குக் குடி பெயர்ந்தது. 1765ல் அவர்கள் அம்சுடர்டாமில் குடியேறினர். யாக்கூபின் தந்தைக்குத் தொழில் வாய்ப்பு எதிர்பார்த்தபடி அமையாததால், ஒல்லாந்த கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பலில், கப்பல் மருத்துவராகப் பணியேற்றுக் கேப் டவுனுக்குப் பயணமானார். மகன் யாக்கூபையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆனால், கப்பல் கேப் டவுனை எட்டுமுன்பே மூத்த ஆஃப்னர் இறந்துவிட்டார். இவர்களது நண்பர்களான ஒரு குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகள் சிறுவனான யாக்கூபை வளர்த்தனர். அதன் பின்னர் யாக்கூப் தானே உழைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணிய அவர்கள் 14 வயதே ஆகியிருந்த யாக்கூபை [[சக்கார்த்தா]] செல்லவிருந்த ஒரு கப்பலில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர்.
 
[[பகுப்பு:பயண எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யாக்கூப்_ஆஃப்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது