யாக்கூப் ஆஃப்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
யாக்கூப் ஆஃப்னர் 1754ம் ஆண்டு [[செருமனி]]யில் உள்ள ஆலெ (Halle) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு பிரான்சியர். ஒரு வைத்தியர். தாய் ஒரு செருமானியர். யாக்கூப் பிறந்து சில நாட்களின் பின்னர் தந்தையின் தொழில் காரணமாக அவர்களது குடும்பம் எம்ப்டென் என்னும் இடத்துக்குக் குடி பெயர்ந்தது. 1765ல் அவர்கள் [[அம்சுட்டர்டாம்|அம்சுட்டர்டாமில்]] குட்டியேறினர். யாக்கூபின் தந்தைக்குத் தொழில் வாய்ப்பு எதிர்பார்த்தபடி அமையாததால், [[ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கப்பலில், கப்பல் மருத்துவராகப் பணியேற்றுக் [[கேப் டவுன்|கேப் டவுனுக்குப்]] பயணமானார். மகன் யாக்கூபையும் அவர் தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆனால், கப்பல் கேப் டவுனை எட்டுமுன்பே மூத்த ஆஃப்னர் இறந்துவிட்டார். இவர்களது நண்பர்களான ஒரு குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகள் சிறுவனான யாக்கூபை வளர்த்தனர். அதன் பின்னர் யாக்கூப் தானே உழைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணிய அவர்கள் 14 வயதே ஆகியிருந்த யாக்கூபை [[சக்கார்த்தா]] செல்லவிருந்த ஒரு கப்பலில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர். சக்கார்த்தாவில் சில காலம் இவர் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். மீண்டு கேப் டவுனுக்குத் திரும்பிய ஆஃப்னர் அங்கே அடிமை வியாபாரி ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அடிமைகளை நடத்துவது தொடர்பில் ஆஃப்னருக்கு அவரது முதலாளியுடன் அடிக்கடி தகராறு ஏற்படலாயிற்று. இதனால், வேலையை விட்டுவிட்டு 1770ல் மீண்டும் அம்சுட்டர்டாமுக்கே திரும்பினார்.
 
அம்சுட்டர்டாமில் குடும்பச் சூழல் சரியாக அமையாததாலும், பயணத்தில் அவருக்கு இருந்த விருப்பும் ஆஃப்னரை மீண்டும் கிழக்கு நோக்கிச் செல்லத் தூண்டியது. 1773ல் கோரமண்டல் கரையின் ஒல்லாந்தரின் தலைமையிடமான நாகபட்டினத்தில் ஒரு உதவிக் கணக்கராகச் சேர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1779ல் செயலர்-கணக்கர் என்னும் பதவி உயர்வுடன் சத்ராசுப்பட்டினம் என்னும் இடத்துக்கு அனுப்பப்பட்டார். அப்போது ஏற்பட்ட நாலாம் ஆங்கில-ஒல்லாந்தப் போரில் போர்க் கைதியாக ஆங்கிலேயரிடம் பிடிபட்ட ஆஃப்னர் மதராசில் சிறை வைக்கப்பட்டார். 1782ன் இறுதியில் விடுவிக்கப்பட்டர் ஆயினும், ஆங்கில ஆட்சியின் கீழ் மதராசில் இருப்பது பாதுகாப்பாக இருக்கவில்லை. அங்கிருந்து டென்மார்க்கின் ஆளுகைக்குள் இருந்த [[தரங்கம்பாடிக்குத்தரங்கம்பாடி]]க்குத் தப்பி வந்த அவர், அங்கும் நிலைமை நன்றாக இருக்காத காரணத்தால் அங்கிருந்து தோணியொன்றில் கடலைக் கடந்து அப்போது ஒல்லாந்தரின் ஆட்சியில் இருந்த யாழ்ப்பாணத்தை அடைந்தார்.
 
[[பகுப்பு:பயண எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யாக்கூப்_ஆஃப்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது