யாக்கூப் ஆஃப்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
கல்கத்தாவில் இருந்த பிரித்தானிய ஆளுனரிடம் கணக்குப் பதிவாளராகப் பணியில் அமர்ந்தார். 1786ல் ஒரிசாவிலும், கோரமண்டல் கரையிலும் விரிவான பயணம் ஒன்றை மேற்கொண்டார். கடைசியாக இந்தியாவில் இருந்த ஆண்டுகளில் போதிய அளவு பணத்தையும் சேர்க்கக்கூடியதாக இருந்தது. 1787ல் அவர் மீண்டும் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அங்கும் சில ஆண்டுகள் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்த ஆஃப்னர், 1790ல் அம்சுட்டர்டாமுக்கு வந்து அங்கே தங்கினார். அங்கிருந்த காலத்தில் தனது பயண அனுபவங்களை நூல்களாக எழுதினார். இவரது முதல் நூல் 1806ல் வெளியானது.
 
1809ம் ஆண்டு, இலங்கை பற்றிய தனது நூலை எழுதிக்கொண்டிருந்தபோது, 55 ஆவது வயதில் இதய நோய் காரணமாக ஆஃப்னர் காலமானார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பயண எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யாக்கூப்_ஆஃப்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது