தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== துவக்கமும் நோக்கமும் ==
தமிழ்நாடு விடுதலைப்படை (தவிப) தொடங்குவதற்கு முன்னால் பள்ளி ஆசிரியரும், இடதுசாரி இயக்கவாதியும், நக்சலைட்டு தலைவருமான புலவர் கலியப்பெருமாளே காரணமாக இருந்தார். நக்சல்பாரிகளுடன் தமிழ்த்தேசியம் தொடர்பான கருத்தாக்கத்தில் புலவர் கலியப்பெருமாளும் தமிழரசனும் அன்பழகன் சுந்தரமும் மாற்றுக்கருத்தை கொண்டிருந்தனர். நக்சல்பாரிகள் இந்திய மார்க்குசிய லெனினிய பொதுவுடைமை கட்சியுடன் (இபொக மாலெ) ஒருமித்த இந்தியாவின் கருத்தாக்கத்தில் உடன்பட்டனர். அதனால் கலியப்பெருமாள், தமிழரசன், சுந்தரம் போன்றோர் கொண்ட தனித்தமிழ்நாடு கொள்கையை இந்திய பொதுவுடைமை தலைமை நிராகரித்தது. இது நக்சல்பாரிகள் இயக்கம் தமிழ்நாடு தரப்பு இந்தியத்தரப்பு என அதிகாரப்பூர்வமாக இரண்டாக நக்சல் இயக்கம் பிரிவுபட வழிவகுத்தது. இதனால் தமிழ்நாடு தரப்பு தமிழரசன் தலைமையில் '''தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிய-லெனினியம்)''' கட்சியையும் அதன் ஆயுதப்பிரிவாக '''தமிழ்நாடு விடுதலைப் படை''' படையணியையும் உருவாக்கினர்.
 
இந்த இயக்கத்தின் நோக்கம் தனித்தமிழ்நாடு கொள்கையாகவும் அதை அடைய ஆயுதப்போராட்டமே வழி என்பதாகவும் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது