செனகல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
 
==புவியியல்==
செனகல் ஆற்றின் தலைப்பகுதி [[கினியா]]வில் உற்பத்தியாகும் செமேஃபே, பாஃபிங் ஆகிய இரண்டு ஆறுகள். இவை மாலியில் உள்ள பாஃபூலாபேயில் ஒன்றாக இணையுமுன்னர் கினியா - மாலி எல்லையின் ஒரு பகுதியாகவும் அமைகின்றன. இங்கிருந்து செனகல் ஆறு மேற்கு நோக்கியும் பின்னர் வடக்கு நோக்கியும் சென்று கலூகோவுக்கு அண்மையில் உள்ள தலாரி மலையிடுக்கு ஊடாகச் செல்கிறது. பின்னர் கோயினா நீர்வீழ்ச்சி ஊடாகச் சென்று கயெஸ் வரை அமைதியாகச் செல்கிறது. அங்கு கொலிம்பினே ஆறு செனகலுடன் இணைகிறது. மாலி-மௌரித்தானியா எல்லையில் இது கராக்கோரோ ஆற்றுடன் இணைந்து அந்த எல்லை வழியே சில மைல்கள் தூரம் ஓடி பாக்கெல் என்னும் இடத்தை அடைகிறது. அங்கே பாலெமே ஆறு செனகல் ஆற்றுடன் இணைகிறது. அங்கிருந்து செனகல்-மௌரித்தானியா எல்லை வழியாக ஓடி அத்திலாந்திக் கடலில் கலக்கிறது.
 
செனகல் ஆறு 270,000 கிமீ<sup>2</sup> பரப்பளவுடன் கூடிய [[வடிநிலம்|வடிநிலத்தைக்]] கொண்டுள்ளதுடன், சராசரி நீரோட்டம் 680&nbsp;மீ<sup>3</sup>/செக் ஆகவும், வருடாந்த நீர் வெளியேற்றம் 21.5&nbsp;கிமீ<sup>3</sup> ஆகவும் உள்ளது.<ref name=whycos>{{citation | title=SENEGAL-HYCOS: Renforcement des capacités nationales et régionales d’observation, transmission et traitement de données pour contribuer au développement durable du bassin du Fleuve Sénégal (Document de projet préliminaire) | publisher=Système Mondial d’Observation du Cycle Hydrologique (WHYCOS) | url= http://www.whycos.org/IMG/pdf/Senegal_HYCOS_september_2007.pdf | year=2007 | language=French }}.</ref><!--actually p3--><ref>[http://www.grdc.sr.unh.edu/html/Polygons/P1812100.html UNH/GRDC Composite Runoff Fields V 1.0 data for Dagana].</ref>
"https://ta.wikipedia.org/wiki/செனகல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது