"வடக்கு வியட்நாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|}}
 
'''வடக்கு வியட்நாம் (North Vietnam)''' நாட்டின் அலுவல் பெயர் '''வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு''' ஆகும்; இது வியட்நாம் மொழியில் வியட்நாம் தான் சூ சோங் கோவா எனப்படுகிறது.<ref name=note-BCSVN group=lower-alpha /> வடக்கு வியட்நாம் தென்கிழக்காசியாவில் 1945 முதல் 1976 வரை அமைந்திருந்த நாடாகும். முழுவதும் இடம்பெற்ற ஆகத்துப் புரட்சியை அடுத்து, பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று, 1945 செப்டம்பர் 2 ஆம் நாள் கனோய் நகரில் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு எனும் பெயரில் அதை ஒரு பொதுவுடைமை அரசாக வியட்நாமியப் புரட்சித் தலைவர் ஓ சி மின் அறிவித்தார்.. பிரான்சு தன் குடியேற்றத்தை உறுதிப்படுத்தவே, பிரான்சுக்கும் ஓ சி மின் தலைமையில் இருந்த வியட்மின் அமைப்புக்கும் (. "வியட்நாம் விடுதலைக் குழுவுக்கும்") இடையே போர் மூண்டது. வியட்நாம் விடுதலைக் குழு என்பது வியட்நாமின் தேசியக் குழுக்களின் கூட்டமைப்பாகும். பெரும்பாலும் இவை பொதுவுடைமை அணிகளால் ஆனவை. வியட்நாம்1946 ஜனவரி 1 இல் வியட்நாமில் முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 333 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய அவை அமைக்கப்பட்டது. 1946 மார்ச்சு 2 இல் ஹோ சி மின் அரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் வியட்நாமியப் பேரரசர் பாவோ தாய் நாட்டின் அதிஉயர் அறிவுரைஞராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 11 இல் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1951 பிப்ரவரி 1 இல் பொதுவுடைமையாளர்கள் இலாவோ தோங் (தொழிலாளர்) கட்சியை உருவாக்கி அறிவித்தனர்.இதனால் வியட்மின் அமைப்பில் இருந்த பொதுவுடைமை சாராதார் எண்ணிக்கை படிப்படியாக மட்டுபட்டது.<ref>' [http://www.vietnam.ttu.edu/virtualarchive/items.php?item=2410211008 ''Ho Chi Minh and the Communist Movement in Indochina, A Study in the Exploitation of Nationalism''] (1953), Folder 11, Box 02, Douglas Pike Collection: Unit 13 - The Early History of Vietnam, The Vietnam Center and Archive, Texas Tech University.'</ref>
 
1946 முதல் 1954 வரையிலான காலகட்டத்தில் வியட்மின் வியட்நாமின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளைக் கைப்பற்றித் தன் கட்டுபாட்டில் கொணர்ந்தது. 1954 இல் பிரான்சை வெற்றிகண்டதும், ஜெனீவா உடன்படிக்கையினால் (1954) பிரான்சுக்கும் வியட்மின் படைக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து, வியட்நாம் விடுதலை பெற்றது. ஜெனீவா உடன்படிக்கை வியட்நாமை வடக்கு, தெற்குப் பகுதிகளாக இரண்டாகப் பிரித்தது. எனவே 1956 ஜூலையில் "வியட்நாமை ஒருங்கிணைக்க வியட்நாம் முழுவதும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது."<ref>"Agreement on the Cessation of Hostilities in Vietnam, July 20, 1954, https://www.mtholyoke.edu/acad/intrel/genevacc.htm, accessed 15 Oct 2015</ref> வடக்குப் பகுதி வடக்கு வியட்நாம் எனவும் தெற்குப் பகுதி தென்வியட்நாம் அல்லது வியட்நாம்குடியரசு எனவும் வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2160435" இருந்து மீள்விக்கப்பட்டது