யாழ் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
தமிழரின் இசை, நடனம், நாடகம் தொடர்பான பல்வேறு நுட்பங்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய தமிழ்க் காப்பிய நூல் [[சிலப்பதிகாரம்]]. இலகுவில் கிடைத்தற்கு அரிதாக இருந்த இந்த நூலை, உ. வே சாமிநாத ஐயர் 1892ல் முழுமையாக அச்சிட்டு வெளியிட்டார். சிலப்பதிகாரத்துக்கு [[அடியார்க்கு நல்லார்]] எழுதிய உரை தமிழ் இசை நுணுக்கங்கள் குறித்த சில விளக்கங்களைத் தந்தாலும் அவ்விசை குறித்து முழுமையாக அறிந்துகொள்வதற்கு இவை போதுமானதாக அமையவில்லை. பின்வந்த அறிஞர்கள் சிலர் இவற்றை ஆராய்ந்து தமிழ் இசையின் தன்மை குறித்து விளக்கங்கள் தந்தனர். சிலப்பதிகாரத்தை நன்கு கற்றிருந்த விபுலானந்தர் அந்நூலின் சொல்லப்பட்டிருந்த இசை நுணுக்கங்கள் குறித்தும், பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பின்னர் வழக்கற்றுப் போய்விட்ட யாழ் என்னும் இசைக்கருவி குறித்தும் அறிய ஆர்வம் கொண்டார். விபுலானந்தர் [[கணிதம்]], [[இயற்பியல்]] ஆகியவற்றிலும் விற்பன்னராக இருந்ததால், இந்த ஆய்வுக்கு அவை உதவியாக அமைந்தன.
 
விபுலானந்தர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்]] தமிழ்த் துறைக்குத் தலைவராக இருந்த காலத்தில், [[கருநாடக இசை]]யின் அமைப்பு, நுணுக்கங்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1936ல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் இடம்பெற்ற இவரது பேச்சொன்றில், பழந்தமிழருடைய யாழ்கள் பற்றி விளக்கியதுடன் அவற்றின் அமைப்பையும் படங்கள் மூலம் விளக்கினார். இவரது ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட அறிஞர்கள் பலரும் இவரது ஆய்வுகளை நூலாக வெளியிடுமாறு ஊக்கம் கொடுத்தனர். எனினும், வெவ்வேறு காலகட்டங்களில் இவரது பணிகள் காரணமாக இந்த ஆய்வு தடைப்பட்டிருந்தது. இந்தியாவில் இமயமலைச் சாரலில் பிரபுத்த பாரதம் என்னும் ஆங்கில நூலுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதும் இந்த ஆய்வை நிறைவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.<ref>கந்தசாமி, நீ., (யாழ் நூலுக்கான முகவுரை) யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். 2, 3.</ref>
 
ஆய்வுக் காலத்தில், [[கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்க]] வெளியீடாகிய தமிழ்ப் பொழிலிலும், [[மதுரைத் தமிழ்ச் சங்கம்]] வெளியிட்டு வந்த செந்தமிழ் என்னும் இதழிலும் இவ்வாய்வுடன் தொடர்புள்ள பல கட்டுரைகள் வெளிவந்தன. அத்துடன் திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வானொலி நிலையங்களில் இது தொடர்பான விபுலானந்தரின் பேச்சுக்கள் இடம்பெற்றன. மேற்குறித்த கட்டுரைகளிலும், பேச்சுக்களிலும் இருந்த விடயங்களும் கருத்துக்களும் யாழ் நூலில் இடம்பெற்றுள்ளன.<ref>விபுலானந்த அடிகளார், யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். 28.</ref>
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது