யாழ் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 24:
}}
 
'''யாழ் நூல்''' பழந்தமிழரின் இசை நுட்பங்கள், [[யாழ்]] ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய [[வில் யாழ்]], [[பேரி யாழ்]], [[மகர யாழ்]], [[செங்கோட்டி யாழ்]], ([[சீறி யாழ்).]], [[சகோட யாழ்]] என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் [[சுவாமி விபுலானந்தர்]] ஆவார். விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ் நூல் ஆகும்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513663.htm | title=விபுலானந்த அடிகளார் | accessdate=31 திசம்பர் 2016}}</ref> தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஆராய்ந்து எழுதப்பட்ட இந்நூலின் அரங்கேற்றம், [[கரந்தைத் தமிழ்க்கல்லூரி|கரந்தை தமிழ்ச்சங்க]] ஆதரவில் [[திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேசுவரர் கோயில்|திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேசுவரர் திருக்கோயிலில்]] 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் நடந்தேறியது.<ref>{{cite web|url=http://dinaithal.com/politics/struggles/10227-vilvavanecuvarar-temple.html|title=வில்வவனேசுவரர் கோவில்|publisher=}}</ref> இதன் பதிப்பு ஒன்றைக் கரந்தை தமிழ்ச்சங்கம் 1974 இல் வெளியிட்டது.
 
== பின்னணி ==
வரிசை 33:
ஆய்வுக் காலத்தில், [[கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்க]] வெளியீடாகிய தமிழ்ப் பொழிலிலும், [[மதுரைத் தமிழ்ச் சங்கம்]] வெளியிட்டு வந்த செந்தமிழ் என்னும் இதழிலும் இவ்வாய்வுடன் தொடர்புள்ள பல கட்டுரைகள் வெளிவந்தன. அத்துடன் திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வானொலி நிலையங்களில் இது தொடர்பான விபுலானந்தரின் பேச்சுக்கள் இடம்பெற்றன. மேற்குறித்த கட்டுரைகளிலும், பேச்சுக்களிலும் இருந்த விடயங்களும் கருத்துக்களும் யாழ் நூலில் இடம்பெற்றுள்ளன.<ref>விபுலானந்த அடிகளார், யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். 28.</ref>
 
== அமைப்பு ==
யாழ் நூல் பின்வரும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது:
# '''பாயிர இயல்''' - இவ்வியலில் தெய்வ வணக்கத்துடன்; இசை நரம்புகளின் பெயரும் முறையும்; இசை நரம்புகளின் ஓசைகளும் அவற்றுக்குப் பிற்காலத்தார் வழங்கிய பெயர்களும்; இயற்கை இசையும் பண்ணப்பட்ட இசையும்; மூவகைத் தானம், ஆரோசை, அமரோசை, நால்வகைச் செய்யுள் இயக்கம்; தேவபாணியும் பரிபாடலும்; மிடற்றுப் பாடலும் கருவிப் பாடலும்; திணைக் கருப்பொருளாகிய யாழின் பகுதி; யாழ்க்கருவியின் தெய்வ நலம், அது தமிழ் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவிய வரன்முறை போன்ற தலைப்புக்களில் ஆய்வு விளக்கங்கள் தரப்படுகின்றன.
வரிசை 43:
# ஒழிபியல்
 
== பதிப்புக்கள் ==
யாழ் நூல் இதுவரை மூன்று பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு 1947ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால், கரந்தை கூட்டுறவுப் பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதற்கான செலவுகளைத் திரு பெ. இராம. இராம. சித. சிதம்பரம் செட்டியார் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.<ref>முதற்பதிப்பின் பதிப்புரை, யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். XXII.</ref>
27 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது பதிப்பையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினரே வெளியிட்டனர். இது 1974ல் வெளிவந்தது. பல அமைப்புக்களும், தனியாரும் வழங்கிய நிதியுதவி இதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டாம் பதிப்பில் க. வெள்ளைவாரணர் தமிழில் வழங்கிய முன்னுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்புப் பல்கலைக்கழக இதழில் வெளியான விபுலானந்தரின் "ஆயிரம் நரம்பு யாழ்" என்னும் ஆங்கிலக்கட்டுரையும் இரண்டாம் பதிப்பில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டது.<ref>இரண்டாம் பதிப்பின் பதிப்புரை, யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். XX, XXI.</ref> பின்னர், சில புலம்பெயர்ந்து வாழும் ஆர்வலர்களினதும், பிறரதும் துணையுடன் திருநெல்வேலி யாதுமாகி பதிப்பகத்தின் சார்பில் யாழ் நூலின் மூன்றாம் பதிப்பு 2003ல் வெளியானது. இப்பதிப்பில் நா. மம்மது அவர்களின் கருத்துரை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.<ref>யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். IV, VI.</ref>
"https://ta.wikipedia.org/wiki/யாழ்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது