இளவரசர் உரூப்பர்ட்டின் துளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
== அறிவியல் பயன்பாடுகள் ==
எரிமலைக் குழம்புகளில் குறிப்பிட்ட சில சூழல்களில் இளவரசர் உரூப்பர்ட்டின் துளிகளைப் போன்ற அமைப்புகள் உருவாகின்றன என்பது குறைந்தது 19ம் நூற்றாண்டிலிருந்தே அறியப்படும் ஒன்றாகும்.<ref>{{cite journal|last=Goodrich|first=Joseph|date=1829|title=Real and supposed effect of igneous action|journal=The American Journal of Science and Arts |volume=16 |url=https://books.google.com/books?id=IjwPAAAAYAAJ&pg=PA349 |page=349 |accessdate=27 September 2014}}</ref> அண்மையில் பிரிசுடல் பல்கலைக்கழகம் மற்றும் ஐசுலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இளவரசர் உரூப்பர்ட்டின் துளிகள் வெடித்துச் சிதறுவதால் உண்டாகும் கண்ணாடித் துகள்களை ஆய்ந்து அதன் மூலம் எரிமலைகளில் உள்ள வெப்ப தகைவுகள் காரணமாய் தோற்றுவிக்கப்படும் கற்குழம்பு சிதைவு மற்றும் சாம்பல் ஆக்கத்தை மேலும் அறிய முயன்றுள்ளனர்.<ref>{{cite web|url=http://www.unige.ch/sciences/terre/mineral/CERG/Workshop2/Program/P-25_Cashman.pdf|title=Breaking magma: Controls on magma fragmentation and ash formation |author1=Cashman, Katharine |authorlink1=Katharine Cashman|author2=Nicholson, Emma |author3=Rust, Alison |author4=Gislason, Sigurdur |accessdate=27 September 2014}}</ref>
 
== இலக்கியக் குறிப்புகள் ==
அன்றைய இலக்கியத்தின் மூலம் அவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டியவர்களாய் இருந்தனர் என்பதை காணலாம். 1663-இல் சாமுவேல் பட்லர் தனது ஹுடிபிராசு என்ற கவிதையில் அவற்றை ஒரு உருவகமாகப் பயன்படுத்தியுள்ளார், மற்றும் பெபைசு தனது நாட்குறிப்பில் அவற்றைக் குறிப்பிடுகிறார்.
 
’கிரேஷாம் கல்லூரியின் பாலே’ என்ற ஆசிரியர் பெயர்தெரியாத பாட்டில் வருவதன் மூலம் இத்துளிகள் இறவாவரம் பெற்றன.
 
சிக்மண்டு பிராய்டு, “குழு உளவியல் மற்றும் ஆணவம் பற்றிய அலசல்” (1921) என்ற தாளில் இராணுவ குழுக்கள் தலைவனை இழப்பதால் ஏற்படும் பீதி காரணமாய் சிதறிப்போவதைப் பற்றிப் பேசுகையில் “வால் உடைக்கப்பட்டதும் இளவரசர் உரூப்பர்ட்டின் துளி சிதறுவதைப் போல குழு சிதறி காணாமல் போய்விடுகிறது” என்று குறிப்பிடுகிறார்.
 
தனது 1988 நாவலான ஆஸ்கர் மற்றும் லூசிண்டாவில் பீட்டர் காரே ஒரு முழு அத்தியாத்தை இத்துளிகளுக்காக ஒதுக்கியுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இளவரசர்_உரூப்பர்ட்டின்_துளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது